பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 3

பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு, அனுபவம் அகியன ரத்தின சுருக்கமாக பேச்சு நலையில் வெளிப்படும் ஒரு சொற்டொடர் ஆகும். தமிழ் மொழிகளில் பேசாத பொருளே இல்லை ஆதலால், பழமொழிகளை தமிழ் மொழியின் அறிவு களஞ்சியம் என்றுதான் சொல்ல வேண்டும். பழமொழி=பழமை+மொழி.

பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 3

பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 3

பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம்.

1) 'உண்டி குறைத்தல், பெண்டிர்க்கு அழகு' என்ற பழமொழியை சொல்லி அதிகம் உணவு உட்கொள்ளும் பெண்களை பார்த்து உண்டி (சாப்பாட்டை) குறைத்து உண்ண வேண்டும் என்பர். நல்லது தான். ஆனால் இதன் உண்மை பொருள் என்ன? என்று பார்ப்போம் வாருங்கள்.

 

'உண்டி குறைத்தல், பெண்டிர்க்கு அழகு'. இதில், உண்டி குறைத்தல் என்றால் சாப்பாட்டின் அளவு குறைப்பு இல்லைங்க, உண்டி குறைத்தல் என்றால் சாப்பாடு செய்யும் நேரத்தின் அளவை குறைத்தல் என்று பொருள் ஆகும். நம் தமிழக உணவுகளை சமைப்பதற்கு நேரம் அதிகமாகும். அதனால், பெண்களுக்கு பிற வேலைகளை செய்ய நேரம் கிடைக்காமல் போகிறது. அதனால், குறுகிய காலத்தில் சுவையான உணவு பதார்த்தங்களை தயாரிப்பதுடன் பிற வேலைகளில் பங்கேற்பது நல்லது.

 

2) 'புண் பட்ட மனதை, புகை விட்டு ஆற்று' என்ற பழமொழி சொல்லி தான் செய்வதை நியாயப்படுத்தும் புகை மகன்களே அவ்வளவு சக்தி புகைக்கு உண்டா? அப்படியானால், இக்காலத்தில் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே இந்த புகைதான். வாருங்கள், இதன் உண்மை பொருளைக் காண்போம்.

 

 

 'புண் பட்ட மனதை, புக விட்டு ஆற்று'. இதில், புகை விட்டு என்று அல்ல, புக விட்டு என்றுதான் கூறியுள்ளனர். புக விட்டு என்றால் புண்பட்ட மனதை வேறு நல்லவிஷயங்களில் புகுத்தி நம்மை புண்படசெய்யும் காரியத்தை மறந்துபோக வேண்டும் என்பது இதன் பொருள்.

 

3) 'அற்பனுக்கு வாழ்வு வந்தால், அற்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான்' என்ற பழமொழியில் சில வார்த்தைகளின் பிழையால் தவறான பொருள் படும் புண்மொழி இது. உண்மை இதோ!

 

'அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால், அற்த்தராத்திரியிலும் கொடை கொடுப்பான்' என்பதில் முன்னோர்கள், உதவிசெய்ய கால நேரம் பார்க்காது உதவியவர்களின் உயர்வை கூறியுள்ளனர். ஆனால்நமக்கு இன்று வழக்கத்தில் உள்ளதை பாருங்கள்.

 

4) 'நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்லு' என்ற பழமொழியை சொல்லி பலர் திட்டுவார்கள். திரைப்படங்களிலும் அதிகம் பயன்படுத்தும் பழமொழி.

 

 

'நல்ல மாட்டுக்கு ஒரே சுவடு, நல்ல மனிதனுக்கு ஒரே சொல்லு' இதில், நல்ல மாட்டுக்கு ஒரே சுவடு என்றால், நோய்தாக்கம், பூச்சிக்கடி இல்லாமல் இருக்கும் நல்ல மாடுகளின் சுவடு (நடப்பது, உண்பது, அசைபோடுவது) போன்றவை ஒரேமாதிரி இருக்கும், அது தவறும் போது மாடு வளர்ப்போர் மாடுகளை கவனித்து சரிப்படுத்துவார்கள். அதுபோலவே, நல்ல மனிதர்கள் நல்ல விஷயங்களை பேசுவதுமட்டும் அல்லாமல், அச்சொல்லையே செய்தும் காட்டி வாழவேண்டும்.

5) மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்''

 

 

மாமியார் உழைத்தால் மண் குடம், மருமகள் உழைத்தால் பொன் குடம்'' என்பதில் ஒரு விவசாயக் குடும்பத்தில் மாமியார் மட்டும் உழைத்தால் அது மண்குடம் வாங்கும் பொருளாதார நிலைக்குதான் அந்த குடும்பம் உயரும். ஆனால் மருமகளும் சேர்ந்து பாடுபட்டு உழைத்தால் குடும்ப பொருளாதாரம் பொன் குடமாக உயரும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

6) 'சேலை கட்டும் மாதரை நம்பாதே' என்ற பழமொழியை கேட்டப்போது புரியாமல் இருந்தது. நம் தென்னிந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் சேலையைதான் அணிவார்கள் எப்படி? நம்மை சார்ந்தவர்களை நம்பாமல் இருப்பதென்று இதை ஆராய்ந்தபோது

 

'சேல் அகட்டும் மாதரை நம்பாதே' இங்கு 'சேல்' என்றால் கண்கள் என்றும் 'அகட்டுவது' என்றால் ஜாடை காட்டுவது என்றும் பொருள். அதாவது, கணவன் இருக்கும்போதே மற்ற ஆடவர்களை பார்த்து சேல் அகட்டும் = கண் ஜாடை காட்டும் மாதரை நம்பாதே என்று எச்சரிக்கும் பழமொழி இது.

 

7) ஆனைக்கு ஒரு காலம் வந்தால், புனைக்கு ஒரு காலம் வரும். இப்பழமொழியில், பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு காலம் வந்தால், பலம் குறைந்தவர்களுக்கும் ஒரு காலம் வரும் என்று இப்பழமொழியைப் பயன்படுத்துவார்கள். ஆனால்

 

'ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால், பூ நெய்க்கும் ஒரு காலம் வரும்' என்ற இப்பழமொழியில் ஆ நெய்க்கு என்பது பசுமாட்டின் நெய்யாகும் இதை இளம்பிள்ளைகள் சாப்பிட்டுவந்தால் உடல் புஷ்டியடைந்து நன்றாக வளர்வார்கள். இப்படி இருக்க வயதானவர்களுக்கு இது வயிற்று உபாதைகளை கொண்டுவரக் கூடியதாகிறது. அப்போது இவற்றிற்க்கு மருந்தாகவும், மாற்றாகவும் வருவதுதான் பூ நெய் அதாவது தேன் என்பது தான் இதன் அர்த்தம்.

 

8) 'கூத்தாடி கிழக்கே பார்ப்பான், கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்' என்ற பழமொழியை பெறும்பாலும் ஆசிரியப் பெருமக்கள் நாளின் கடைசி வகுப்பு முடியும் போது சொல்வார்கள்.

 

 'கூத்தாடி கிழக்கே பார்ப்பான், கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்' இப்பழமொழியில் கூத்தாடி (நாடக நடிகர்கள்) எப்போது விடியும் நாடகத்தை முடித்துவிட்டு ஊருக்கு போகலாம் என்று கிழக்கே சூரிய உதயத்தையும், கூலிக்காரன் இப்போது வேலை முடியும் வீட்டுக்கு போகலாம் என்று மேற்கே சூரிய மறைவை எதிர் நோக்கிக்கொண்டிருப்பதை போல மாணவர்கள் கடைசி மணிச்சத்தம் எப்போது கேட்கும் என்று எதிர்பார்த்து காத்திருப்பதற்கு கூறுவார்கள்.
 

 

9) 'ஊரார் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டிக் கையே' என்ற பழமொழியை அனைவரும் ஊரார் வீட்டு நெய்யால் வந்த உணவின் சுவையை, தன் மனைவியின் கையால் செய்ததனால் தான் இவ்வளவு சுவையாக உள்ளது என்று வழக்கத்தில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால்,

 


'ஊரார் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டிக் கையே' இப்பழமொழியில் கூறப்பட்டுள்ள உண்மைப் பொருள் பிறர் பொருட்களை பயன்படுத்தும் போது அல்லது செலவழிக்கும் போது அளவுக்கு மிஞ்சியே செய்பவர்களுக்காக கூறப்படும் பழமொழி இது.

 

10) 'கொட்டு பட்டாலும், மோதிரக் கையால் கொட்டுப் படனும்' என்ற பழமொழியை படித்ததும் சிரிப்புதான் வந்தது, கொட்டு வாங்கனுமானா வெறுங்கையால் வாங்கினா என்ன? மோதிரக்கையால் வாங்கினா என்ன? வலிக்கதானே செய்யும். வாருங்கள். இதன் உண்மை பொருளைப் பார்ப்போம்.

 

 

'கொட்டு பட்டாலும், மோதுகின்ற கையால் கொட்டுப் படனும்' இப்பழமொழியில் 'கொட்டுப்படுதல்' என்றால், தோற்கடிக்கப்படுதல் ஆகும். அப்படி தோற்க்கடிக்கப்பட்டாலும் நம்மை எதிர்த்து மோதுகின்ற பலம் வாய்ந்தவர்களை எதிர்த்துதான் நாம் மோத வேண்டும். நம்மைவிட வலிமை மிகுந்தவர்களிடமோ அல்லது வலிமை குறைந்தவர்களிடமோ மோதி பெறுகின்ற வெற்றி தோல்லிவிகள் நம்மை சார்ந்தது அல்ல என்பது இதன் உண்மையானப் பொருள் ஆகும்.

வாழ்க தமிழ்...வளர்க தமிழ்...வெல்க தமிழ்...

முந்தைய பகுதிக்குச் செல்ல

பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 2

What's Your Reaction?

like
6
dislike
0
love
2
funny
1
angry
0
sad
0
wow
0