பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 1

பழமொழி=பழமை+மொழி. இக்காலக்கட்டத்திலும் நாம் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க பழமொழிகளை பயன்படுத்துகிறோம். அப்படி அறிவுரையாக வழங்கப்படும் பழமொழியின் அனுபவம் நமக்கு இருப்பது மிக முக்கியம். "பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது", என்று சொல்வார்கள். இதற்கேற்ப பழமொழிகளில் என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது மட்டும் இல்லாமல், உங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும் பழமொழிகளின் உண்மை அர்த்தத்தையும், வடிவத்தையும் இதில் காண்போம்.

பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள்  பகுதி 1

பழமொழி

பழமொழி=பழமை+மொழி. இக்காலக்கட்டத்திலும் நாம் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க பழமொழிகளை பயன்படுத்துகிறோம். அப்படி அறிவுரையாக வழங்கப்படும் பழமொழியின் அனுபவம் நமக்கு இருப்பது மிக முக்கியம். "பழமொழி சொன்னா அனுபவிக்கனும்", ஆராயக்கூடாது, என்று சொல்வார்கள். இதற்கேற்ப பழமொழிகளில் என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது மட்டும் இல்லாமல், உங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும் பழமொழிகளின் உண்மை அர்த்தத்தையும், வடிவத்தையும் இதில் காண்போம்.

1) 'ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு' என்ற பழமொழி நாம் பரவலாக பலர் பேசும், ஏன்? திரைப்படங்களிலும் அதிகம் பயன்படுத்தும் பழமொழி.

'ஆயிரம் பேருக்கு போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு' என்பது தான் இப்பழமொழியின் உண்மையான பொருள் வடிவம்.

2) 'பந்திக்கு முந்து, படைக்கு பிந்து' என்ற இந்த பழமொழிக்கு அர்த்தம் கேட்டால் இவ்வாறாக கூறுவார்கள்." சாப்பாட்டுக்கு முந்த வேண்டும், படைக்கு பிந்த வேண்டும் என்பர். ஆனால்,

                                                              

'பந்திக்கு முந்தும், படைக்கு பிந்தும்' என்பது தான் இப்பழமொழியின் உண்மையான வடிவம். இதன் பொருள் ' வலது கை பந்திக்கு அதாவது,சாப்பாட்டுக்கு முந்தும், படைக்கு அதாவது போரில் வில்லில் அம்பை வைத்து எய்வதற்கு பின்னோக்கி வலது கை செல்கிறது.

3) 'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே' என்ற பழமொழிக்கு ' மண்ணால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம் என்று கூறுவர். இதன் பொருள் இது அல்ல.

'மண் குதிர் யை நம்பி ஆற்றில் இறங்காதே' என்பதில் குதிர் என்பதன் பொருள் ஆற்றில் மண் குவியலாக காணப்படும் பகுதி. இவை கரைப்பகுதி போன்று காட்சி அளிக்கும். ஆனால், கால் வைத்தால் உள்வாங்கும். இதனால், முன்னோர்கள் குதிர் யை நம்பி இறங்காதே என்றார்கள்.

4) 'ஆயிரம் பேரைக்கொன்று வைத்தியம் பார்த்தால் தான் அர வைத்தியனாகலாம்' என்ற பழமொழியை பலர் பேசும் போது பயமாக இருக்கும். ஆனால்,

'ஆயிரம் வேரைக் கொண்டு வைத்தியம் பார்த்தால் தான் அர வைத்தியனாகலாம்' என்பது தான் இப்பழமொழியின் உண்மையான பொருள் வடிவம்.

5) 'கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை' என்ற பழமொழியை பலர் பிறரை திட்டுவதற்காக பயன்படுத்துவார்கள். ஆனால்,

'' 'கழு' தைக்கும் போது தெரியுமாம் கற்பூர வாசனை'' என்பதில் 'கழு' என்பது ஒரு வகையான கோரை புல் வகை இவற்றைக் கொண்டு பாய் தாயரிப்பார்கள். இவை,கற்பூர வாசனை வீசக்கூடியது,பூச்சிகளை விரட்டகூடியது.

6) 'களவும் கற்று மற' என்ற பழமொழியை பலரும் பேசும் போது குழப்பமாக இருக்கும்.திருட்டை ஊக்குவிக்கும் வண்ணம் இருக்குதே என்று! ஆனால்,

'களவும், கற்றும் மற' இங்கு களவும் என்றால் திருட்டு, கற்றும் என்பதற்க்கு பொய் என்று அர்த்தம்.இப்பழமொழியில் திருட்டு, பொய் ஆகிய இரண்டையும் மறந்து விடவேண்டும் என்று கூறிவுள்ளனர்.

7) 'ஊரான் பிள்ளை ஊட்டி வளர்த்தால், தான் பிள்ளை தானே வளரும்' என்ற பழமொழியை பலரும் பேசும் போது தானம், தர்மம் பண்ண வேண்டும் என்று நினைப்போம் நல்லது தான். ஆனால்,

'ஊரான் பிள்ளை ஊட்டி வளர்த்தால், தான் பிள்ளை தானே வளரும்' என்ற இப்பழமொழியின் உண்மையான பொருள் ஊரான் பிள்ளையாகிய தன் மனைவி கர்ப்பம் தரித்திருக்கும்போது அவளை சத்தான உணவுப்பொருட்கள் கொடுத்து ஊட்டி வளர்க்கும்போது அவள் வயிற்றிலிருக்கும் தான் பிள்ளை நன்றாக வளரும் என்று பொருள்.

8) 'உணவும் மருந்தும் மூன்றும் நாட்கள்' என்ற பழமொழியை பலரும் பேசும் போது புரியாமல் இருக்கும்.

'உணவும் மருந்தும் மூன்றும் நாட்கள்' இப்பழமொழியில் வாரத்தின் நாட்களில் விரத நாட்கள் மூன்று அந்நாட்களை மருந்து நாள் என்றும்.மற்ற நாட்களில் முன்று உணவு நாட்கள்.ஒன்று விருந்து நாள்.

9) 'போக்கு கத்தவனுக்கு போலிஸ் வேலை, வழி யத்தவனுக்கு வாத்தியார் வேலை' என்ற பழமொழியை புரிந்துகொள்ளாமல் போலிஸ் வேலைக்கும்,வாத்தியார் வேலைக்கும் தன் பிள்ளைகளை அனுப்பாத பெற்றோர்களும் முன்னதோர் காலத்தில் இருக்கதான் செய்தார்கள்.

'போக்கு கற்றவனுக்கு போலிஸ் வேலை, வழி கத்தவனுக்கு வாத்தியார் வேலை' இப்பழமொழியில் போக்கு கற்றுக் கொடுப்பவன் போலிஸ், வழிநெறிகளை கற்றுக்கொடுப்பவன் வாத்தியார் என்பதுதான் உண்மையான இதன் பொருள்.

10) 'பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க' என்ற பழமொழி கேட்ட உடனே பதினாறு என்றால் பிள்ளைகள் பெற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்இன்றைக்கு இருக்கும் பொருளாதார சூழலில் இது சத்தியமா?

'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' இப்பழமொழியில் பதினாறும் என்றால் கல்வி, நோயின்மை, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம், ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனதில் துணிவு, நீண்ட வாழ்நாள், வெற்றி, நல்ல உழைப்பு மற்றும் இன்ப நுகர்ச்சி, ஆகிய செல்வங்கள் உங்கள் வாழ்விலும் பெருகிட கடவுளை பிராத்திக்கிறேன்.


மேலும், பல தகவல்கள் உள்ளன. ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ளலாம். வாருங்கள்...

1)பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் அடுத்த பகுதி

https://www.learnmoredeeply.com/tamil/பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி-3

2) பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் முந்தைய பகுதி

https://www.learnmoredeeply.com/tamil/ பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி-2

What's Your Reaction?

like
3
dislike
0
love
2
funny
0
angry
0
sad
0
wow
2