இயற்கை விவசாயம் ஒரு அறிமுகம்

இயற்கையை வெல்ல முடியுமா?  ஆம் முடியும்..... இயற்கையோடு இயைந்து (இசைந்து) வாழ்வது தான் அதனை வெல்வதற்கான வழி.

இயற்கை விவசாயம் ஒரு அறிமுகம்
இயற்கை விவசாயம் ஒரு அறிமுகம்

இயற்கை விவசாயம்

 

Description: C:\Users\RAJAMANICKAM\Desktop\agri.jpg

 

இயற்கையை வெல்ல முடியுமா?  ஆம் முடியும்.....

இயற்கையோடு இயைந்து (இசைந்து) வாழ்வது தான் அதனை வெல்வதற்கான வழி.

 

Description: C:\Users\RAJAMANICKAM\Desktop\images (3).jpeg

 

 

இப்போதைய காலகட்டங்களில் இயற்கை விவசாயம் என்ற சொல்லை பரவலாக நாம் அனைவரும் கேட்க ஆரம்பித்துள்ளோம். இச்சொல் மந்திரமாக மாறும் காலம் வரப்போகிறது. ஏனென்றால், சில காலங்களுக்கு முன்பு பலர் வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்று லட்சியம் கொண்டு பல்வேறு துறைகளை தேர்ந்தெடுத்து பட்டணங்களில் குடியேறி அத்துறையில் சாதனைகளின் மூலம் பணத்தையும், மரியாதையையும் தனக்கென சேர்த்தார்கள். ஆனால், அவர்களின் ஆரோக்கியம் பின்னர் குறைந்து கொண்டே வந்தது. அதை திரும்ப பெற அவர்கள் சேர்த்து வைத்த அனைத்தையும் அவ்வாரோக்கியத்திற்காக செலவு செய்கிறார்கள். இதற்கான இன்றைய வழி மருத்துவம் இதை நாம் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

 

இங்கு, நமக்கு பல கேள்விகள் எழும்புகிறது.

 

மருந்துகள் மூலம் ஆரோக்கிய குறைபாட்டை எப்படி குணப்படுத்துகிறார்கள்?

 

குணப்படுத்தும் மருந்துகளின் மூலப்பொருள்கள் எங்கிருந்து எடுக்கப்படுகிறது?

 

"உணவே மருந்து",  என்று சொல்வோர் பெரியோர். இதற்கேற்ப பெரும்பாலான மருந்துகள், உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

 

நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் நமக்கு எப்படி ஆரோக்கியம் குறையும்?

 

செயற்கை விவசாயம் முன்பு பசுமை புரட்சிக்காக, ரசாயன உரங்கள் பயண்படுத்தப்பட்டு, பின்பு பணத்திற்காக பெருமளவு ரசாயன உரங்கள் வயலில் கொட்டப்பட்டு தற்போது விளைநிலங்கள் மலட்டுத் தன்மை அடைந்துள்ளது. பின்பு பூச்சிகளின் தாக்குதல் காரணமாக  பயிர்களில் பூச்சிக்கொல்லிகளும் தற்போது பயண்பாட்டில் வந்து பூச்சிகளின் தகவமைப்பிற்கேற்றவாறு பூச்சிக்கொல்லிகளின் வீரியம் வளர்ந்து கொண்டே வருகிறது. இவைகளே, ஆரோக்கியமற்ற உணவிற்குக் காரணம்.

தற்போது ஆரோக்கியமான உணவை நாம் பெற ஒரே வழி இயற்கை விவசாயம் மட்டுமே, அப்போதுதான் நோயற்ற வாழ்வு வாழ முடியும்.

 

இனி,

நாம் இயற்கை விவசாயத்தில் உள்ள படிநிலைகள்,

இயற்கை உரங்கள் எப்படி தயாரிப்பது,

இயற்கை பூச்சிக்கொல்லி எப்படி தயாரிப்பது,

வயல்மண்ணை எப்படி பண்படுத்துவது

என்று வருங்காலங்களில் விரிவாய் செயல்முறைகளை பார்ப்போம்.

அடுத்த பகுதிகளுக்கு நேரடியாக செல்ல,

1) ஜீரோ பட்ஜெட் விவசாயம்

https://www.learnmoredeeply.com/tamil/ஜீரோ பட்ஜெட் விவசாயம்

2) பீஜாமிர்தம்

https://www.learnmoredeeply.com/tamil/பீஜாமிர்தம்

3) ஜீவாமிர்தம்- வளர்ச்சி ஊக்கி

https://www.learnmoredeeply.com/tamil/ ஜீவாமிர்தம்- வளர்ச்சி ஊக்கி

4) பஞ்சகாவியா- வளர்ச்சி ஊக்கி மற்றும் விதை நேர்த்தி

https://www.learnmoredeeply.com/tamil/பஞ்சகாவியா- வளர்ச்சி ஊக்கி மற்றும் விதை நேர்த்தி

பசுமை புரட்சிக்காக...., இனி, இயற்கை விவசாயம் மட்டுமே.....!

What's Your Reaction?

like
3
dislike
1
love
2
funny
0
angry
0
sad
0
wow
1