பண்டைய தமிழக நாட்டு மாட்டு இனங்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நம் மண்ணில் இயற்கை அறிவில் விளைந்த முத்துகள், தமிழர் சொத்துக்கள் நம் நாட்டு மாட்டு இனங்கள். அது மட்டுமல்ல, உழவுக்கு உயிரையும் உழவர்களுக்கு வாழ்வையும் ஊட்டுபவை தான் நம் நாட்டு மாட்டு இனங்கள். அத்தோடு நின்று விடாமல் நம் நாட்டின் மருத்துவத்திற்கு உதவி செய்து, நோய் எதிர்ப்பு ஆற்றலை நமக்கு தந்து, நம்மை உயிர் வாழச்செய்யும் பொக்கிஷமும், புதையலும் தானே நம் நாட்டு மாட்டு இனங்கள். அவைகளை நாம் இழந்துவிட்டோம். ஆம், இந்தியாவில் 137 வகையான நாட்டு மாட்டு இனங்கள் இருந்தன. ஆனால், தற்போது 32 வகைக்கும் குறைவான மாட்டு இனங்கள் தான் காணப்படுகிறது. அவற்றிலும் சில அழிய கூடிய நிலையில் உள்ளது. இவற்றில், பெரும்பாலும் தமிழ்நாட்டை சார்ந்தவை. ஜல்லிக்கட்டு முலம் சில வகை இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பதிப்பில், நாட்டு மாட்டு இனங்களின் பெயர்களை வரிசையாகவும், வகை படித்தியும் வழங்கி உள்ளேன்.
தமிழ் நாட்டு மாட்டு வகைகள்:
காட்டு வாழ்க்கையில் இருந்து, நாகரிகப் பாதையில் நடைபோடத் தொடங்கிய மனிதன், பாலுக்காக மட்டுமல்லாமல்.. உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து, வீர விளையாட்டு, சுபநிகழ்ச்சி என பல வகைகளிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்ந்துக் கொண்ட விலங்குகளில் முதலானது மாடு!
காஷ்மீர் தொடங்கி, கன்னியாகுமரி வரை பல்வேறு பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால், காலப்போக்கில்.. ' அதிக பால்' வெண்மை புரட்சி என்று கோஷம் இந்தியாவில் உரத்து ஒலித்ததோடு, மாடுகளின் பிற தேவைகளும் குறைய ஆரம்பித்தது. பின் உழவோட்டும் எந்திரங்கள் வருகையும் ஒரு காரணம். இதனால், நம் நாட்டு ரக மாடுகள் எல்லாம் 'அடிமாடு' எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு, வெளிநாட்டுக் கலப்பின மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
பண்டைய தமிழக நாட்டு மாட்டு இனங்கள்:
நம் தமிழ்நாட்டை ஐந்து பகுதிகளாக பிரித்துக் கொள்வோம். அவை சேர தேசம், சோழ தேசம், பாண்டிய தேசம், திராவிட தேசம் மற்றும் நடு நாடு ஆகியவைகள். அவ்வாறே மாடுகளையும் இவ்வைந்து தேச மாட்டினங்களாக வகைப்படுத்தி அத்தேச மாட்டு இனங்கள் என்னென்ன என்று நாம் பார்ப்போம்.
அதன் பிறகு 99 வகையான மாட்டு இனங்களையும் பின்னர் நிறங்களை அடிப்படையாக வைத்து பிரிக்கப் பட்ட சில மாட்டு இனங்களையும் காண்போம்.
1) சேரநாடு அல்லது கொங்குதேச எல்லைகள்:
வடக்கெல்லை - நீலகிரி மலைத்தொடர்கள்
மேற்கெல்லை - வெள்ளையங்கிரி,ஆனைமலை
கிழக்கெல்லை - ஏற்காடு மலை, கொல்லிமலை
தெற்கெல்லை - சிறுமலை, கொடைக்கானல் பொதிகை மலைத்தொடர்கள்
இவ்வெல்லைகளை, உள்ளடக்கிய ஊர்களின் பெயர்களை காண்போம். சத்தியமங்கலம், பெருந்துரை, பவானி, ஈரோடு, திருப்பூர், கோவை, பல்லடம்,அவினாசி, பொள்ளாச்சி, பழனி, ஒட்டன்சத்திரம், காவிரி ஆற்றின் மேற்கே உள்ள ஆனைமலை பகுதிகள் .
1. மீகொங்க மாடு |
இது மேகரை மாடு அல்லது காங்கயம் மாடு எனவும் அழைக்கப்படுகிறது. |
2. மழகொங்க மாடு |
இது கீகரை மாடு அல்லது திருச்செங்கொடு மாடு என அழைக்கப்படுகிறது. இது அழியக்கூடிய நிலையில் உள்ள மாட்டு இனம் ஆகும். |
3. செம்மரை மாடு |
இது மலையன் அல்லது பர்கூர் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வகை மாடுகள் ஈரோடு பகுதியை சார்ந்தவை. |
4. பாலமலை மாடு |
இவ்வகை மாடுகள் ஆலம்பாடி மற்றும் பர்கூர் வகை மாடுகளுடன் ஒத்த வடிவம் கொண்டவை. அதனால், பாலமலை மாடு வகைகள் அழிந்துவிட்டது. இவைகள் சேலம் பகுதியை சார்ந்தவை. |
5. மராட்டியான் மாடு |
இது ஆலம்பாடி மற்றும் லம்பாடி எனவும் அழைக்கப்படுகிறது. சவாரி வண்டிகளில் பயன்படுத்தும் இவ்வகை மாடுகள் தர்மபுரி, மேட்டூர், பெங்களூர் மற்றும் பவானி பகுதியை சார்ந்தவை. |
6.கொல்லி மலைமாடுகள் |
இவை சேரவராயன், பச்சைமலை, கல்வராயன் மலை பகுதியில் காணப்படுபவை. இவ்வகை மாடுகள் குட்டை வடிவம் கொண்டவையாகும். |
காங்கயம்:
ஆலம்பாடி:
பாலமலை மாடு:
2) சோழநாடு அல்லது சோழியதேச எல்லைகள்:
வடக்கெல்லை – வடவெள்ளாறு
மேற்கெல்லை – மதிற்கரை
கிழக்கெல்லை - தென்வெள்ளாறு, பிரான்மலை
தெற்கெல்லை – வங்கக்கடல்
கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மணப்பாறை, திருச்சி, துருவங்குறிச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, காவிரி பாசனப்பகுதிகள் முழுவதும் சோழநாட்டு எல்லைகளுக்கு உட்பட்ட முக்கிய பகுதிகள்.
காவிரி ஆற்றின் கிழக்கு பகுதிகள் மேச்சேரி, ஓமலூர், நங்கவல்லி, சேலம், சங்ககிரி, ஆத்தூர், கங்கவல்லி, ராசிபுரம், நாமக்கல், காட்டுப்புத்தூர், பரமத்தி ஆகிய பகுதிகள்.
|
இவ்வகை மாடுகள் உருவம் பருத்தும், குள்ளமாகவும், கொம்புகள் சிறியதாகவும் இருக்கும். இவைகள் கோவில் மாடுகளாக வளர்க்கப்படுபவைகள். |
|
இவைகள் மணப்பாறை பகுதியில் மட்டும் காணப்படும் வகைகளாகும்.இவை ஏறு தழுவுதலுக்காக பயன்படுத்தப்படுகிறது. |
|
இவைகள் குளித்தலை, மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் ஏறு தழுவுதல், விவசாயப் பயன்பாடு மற்றும் ஜல்லிகட்டு போட்டிகளில் பயன்படுத்தப்படும் இனங்களாகும். |
கோநாடன் மணப்பாறை:
3) பாண்டியநாடு அல்லது பாண்டிதேச எல்லைகள்:
வடக்கெல்லை - பன்றிமலை (கொடைக்கானல், பொதிகை மலைத்தொடர்கள்)
மேற்கெல்லை - பெருவழி-தென் பொதிகை
கிழக்கெல்லை - சேது (கடல்)
தெற்கெல்லை - குமரி (கடல்)
சிவகங்கை மாவட்டப் பகுதிகள், நிலக்கோட்டை, நத்தம், மதுரை, தேனி, பெரியகுளம், ராமநாடு, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி வனப்பகுதி ஆகியவை.
|
இவ்வகை மாட்டு இனங்கள் சிவகங்கை காட்டு பகுதிகளில் காணப்படுபவை. |
|
இவைகள் ஜல்லிக்கட்டு மாட்டு வகைகளாகும். இவைகள் நிலக்கோட்டை, நத்தம், மதுரை, தேனி, பெரியக்குளம், சிவகங்கை மற்றும் ராமநாடு போன்ற பகுதிகளில் பரவலாக காணப்படும் மாட்டுவகைகளாகும். |
|
தேனி மாவட்ட பகுதிகளில் காணப்படும் இந்த மாடு காப்பிலியர் மாடு எனவும் 'தேவரு ஆவு' என்றும் அழைக்கப்படுகிறது. |
|
இவைகள் திருநெல்வேலி பகுதிகளில் காணப்படும் மாட்டினமாகும். |
இருச்சாளி:
புளிக்குளம்:
4)தொண்டைநாடு அல்லது திராவிடதேச எல்லைகள்:
வடக்கெல்லை – வேங்கடம்
மேற்கெல்லை – பவளமலை
கிழக்கெல்லை – கடல்
தெற்கெல்லை - வடவெள்ளாறு
திருவண்ணாமலை, சித்தூர், வேலூர், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம் போன்ற தற்போதிய பெரும் நகரங்கள் இவ்வெல்லைக்குள் அடங்கும். இப்பகுதியில் கன்னடம், தெலுங்கு, தமிழ் பேசும் மக்கள் பெருமளவு வாழ்ந்ததால் இப்பகுதியை திராவிடநாடு என்று அழைப்பர்.
|
இவைகள் வெள்ளை, கருப்பு, புள்ளி, சிவப்பு போன்ற நிறங்கள் கொண்ட மாட்டுவகைகளாகும். |
|
இவைகள் ஊஞ்சல் (உசிலை) தழைகளை மட்டுமே உண்ணுபவை. மேலும் இவை பஞ்சம் தாங்கும் மாட்டு வகைகளாகும். அழியக்கூடிய நிலையில் உள்ள மாடுகளான இவைகள் 100 என்ற எண்ணிக்கையில் தொண்டை வெள்ளாளர்களால் வளர்க்கப்பட்டு வருகிறது. |
|
பெயருக்கு ஏற்றது போலவே குட்டைவடிவமும், கட்டான உடல் வாகுக்கொண்ட மாட்டு இனமாகிய இவைகள் பால் அதிகம் கொடுப்பவை. |
செவலைமாடு:
துரிஞ்சித்தழை மாடு:
புங்கனூர் குட்டை:
5) நடுநாட்டு எல்லைகள்:
வடக்கெல்லை – தென்பெண்ணையாறு
மேற்கெல்லை – ஏற்காடு
கிழக்கெல்லை – கடல்
தெற்கெல்லை - வடவெள்ளாறு
நடுநாட்டின் பெரும்பாலான பகுதி சோழநாட்டை சார்ந்தவை. மற்றவை திராவிட பகுதியாகும். கடலூர், வடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், சீர்காழி, காட்டுமன்னார்கோயில் போன்ற பகுதிகள்.
1. மொட்டை நாட்டான்
இவை பெரம்பலூர் மொட்டை இனத்தை ஒத்தவை.
99 வகையான மாடுகளின் அட்டவணைகள்:
1.அத்த கருப்பன் |
11. கத்தி கொம்பன் |
2.அனரி காளை |
12. கருமரியன் |
3.அழுக்கு மரியன் |
13.கருமரை காளை |
4.ஆள விரிச்சான் |
14. கருங்கூளை |
5.ஆனை சொரியன் |
15. களர்கால் வெரியன் |
6.கட்டை காளை |
16. களர்ச்சி கண்ணன் |
7.கட்டை காரி |
17. கள்ள காளை |
8.கட்டைவாழ் கூழை |
18. கள்ள காடன் |
9.கட்டை கொம்பன் |
19. கருப்பன் |
10.கட்டு கொம்பன் |
20. கண்ணன் மயிலை |
21. காடம்பசு |
31. கூளை சுவளை |
22. காரிகாளை |
32.கொட்டை பாகான் |
23. காற்சிலம்பன் |
33.கொண்டைதலையன் |
24. குட்டை செழியன் |
34.ஏறி சுழியன் |
25. குட்டை நரம்பன் |
35. ஏறு வாளன் |
26. குள்ள சிவப்பன் |
36. நாரை கழுத்தன் |
27. குத்து கருப்பன் |
37. நெட்டை கொம்பன் |
28. குண்டு கண்ணன் |
38. படைப்பு பிடிங்கி |
29. கூறுக்கொம்பன் |
39. படளை கொம்பன் |
30. கூளை வாளன் |
40.பசுங்கழுத்தன் |
41. பனங்காய் மயிலை |
51. மறை சுவளை |
42. பட்டிக்காளை |
52. மயிலை |
43. பால் வெள்ளை |
53. மயிலை காளை |
44.பொட்டைக்கண்ணன் |
54. மேகவண்ணன் |
45. பொக்கு வாயன் |
55. முறிக்கொம்பன் |
46. போருக் கண்ணன் |
56. முறிக்காளை |
47.மட்டை கொழும்பன் |
57. முட்டிகாலன் |
48. மஞ்சள் வாளன் |
58. சங்குவண்ணன் |
49. மஞ்சரி வாளன் |
59. செம்மறியன் |
50. மஞ்ச மயிலை |
60. செம்மறை காளை |
61. செந்தாழை வைரன் |
71. வட்ட கரியன் |
62. செவலை எருது |
72. வர்ணக் காளை |
63. சொரியன் |
73. வளை கொம்பன் |
64. தனப்பன் |
74. வரி கொம்பன் |
65.தள்ளையன் காளை |
75. வெள்ளி கூடும்பன் |
66. தரிக்கொம்பன் |
76. வெள்ள கொம்பன் |
67. தொடைசேர் கூழை |
77. வெள்ளை பூரன் |
68. தூக்கசெழியன் |
78. வெள்ளை |
69. வட்ட புளை |
79. கரித்திய பிள்ளை |
70. வட்ட செழியன் |
80. சந்தனபிள்ளை |
81. பனங்காரி |
82. செம்புத்துக்காரி |
83. காரி மாடு |
84. கருக்க மாடு |
85. புளிங்குலம் காளை |
86. காங்கேயம் |
87. உம்பளச்சேரி |
88. பர்கூர் காளை |
89. கிளாவெரி காளை |
இவ்வினங்களை ஐந்து பேரினத்தலைப்பாக நான்கு தலைப்புகளை நிறங்களின் அடிப்படையிலும் பின்னர் ஐந்தாவது தலைப்பாக ஜல்லிக் கட்டு மாடுகள் என்ற அடிப்படையிலும் வகைப்படுத்திப் பார்ப்போம்.
1) மயிலை (வெள்ளை / சாம்பல்)
2) காரி (கருப்பு)
3) செவளை (சிவப்பு)
4) பிள்ளை (சந்தன நிறம்)
5) ஜல்லிக்கட்டு காளைகள் (தற்போது உள்ள ஜல்லிக்கட்டு காளை இனங்கள்)
1) மயிலை (வெள்ளை / சாம்பல் நிறம்)
கண்ணன் மயிலை, பனங்காய் மயிலை, மயிலை காளை, பால் வெள்ளை, சங்கு வண்ணன், வெள்ளை, கட்டை கொம்பன், கட்டு கொம்பன், கத்தி கொம்பன், கூறுக் கொம்பன், நெட்டை கொம்பன், படளை கொம்பன், மட்டை கொம்பன், முறிக்கொம்பன், தறிக்கொம்பன், வளை கொம்பன், வரி கொம்பன், வெள்ளை கொம்பன், வெள்ளி குடும்பன், மேக வண்ணன்.
2) காரி (கருப்பு நிறம்)
காரி மாடு (தேனி மலை காளை), செம்புத்து காரி, பனங்காரி, கட்டைகாரி, கருக்க மாடு, அத்த கருப்பன், கரு மரியன், கரிமறை காளை, கள்ளக் காளை, குத்து கருப்பன், கருப்பன்.
3) செவளை (சிவப்பு நிறம்)
செவளை எருது, செம்மறியன், செம்மறை காளை, செந்தாழை வைரன், சொரியன், குள்ள சிவப்பன், குட்டை செழியன், குட்டை நரம்பன், சங்கு வண்ணன், வட்ட செழியன், நாரை கழுத்தன்.
4) பிள்ளை (சந்தனம் நிறம்)
கரித்தியா பிள்ளை, சந்தன பிள்ளை, பொட்டைக் கண்ணன், பொக்கு வாயன், போருக் கண்ணன், மஞ்சள் வாளன், மஞ்சளி வாளன், தனப்பன், தள்ளையன் காளை, தொடைசேர் கூளை, ஏறு வாளன், கூளை வாளன், கொட்டை பாகன், கொண்டை தலையன்.
5) ஜல்லிக்கட்டு காளைகள் (தற்போது உள்ள ஜல்லிக்கட்டு காளை இனங்கள்)
புளிங்குலம் காளை, காங்கேயம், உம்பளச்சேரி, பர்கூர் காளை, கிளாவெரிகாளை மற்றும் காரி மாடு (தேனி மலை மாடு).