இயற்கை விவசாயத்தில் வளர்ச்சி ஊக்கியாக பயன்படும் ஜீவாமிர்தம்

"விவசாயத்தை நம் நாட்டின் முதுகெலும்பு என்று பலர் போற்றுகிறார்கள். அதுபோன்று ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பு ஜீவாமிர்தம் என்றால் அது மிகையாகாது". "நாங்களெல்லாம் மூட்டை மூட்டையாக ரசாயன உரங்களை நிலங்களில் கொட்டியும் கிடைக்காத பசுமை... வெறும் ஜீவாமிர்தத்தில் இருக்கிறதே என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். இதை நம்பவே முடியவில்லை என்றும் பலர் மெய் சிலிர்க்கிறார்கள்."

இயற்கை விவசாயத்தில் வளர்ச்சி ஊக்கியாக பயன்படும் ஜீவாமிர்தம்

இயற்கை விவசாயத்தில் வளர்ச்சி ஊக்கியாக பயன்படும் ஜீவாமிர்தம்

"விவசாயத்தை நம் நாட்டின் முதுகெலும்பு என்று பலர் போற்றுகிறார்கள். அதுபோன்று ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பு ஜீவாமிர்தம் என்றால் அது மிகை ஆகாது.'' "நாங்களெல்லாம் மூட்டை மூட்டையாக ரசாயன உரங்களை நிலங்களில் கொட்டியும் கிடைக்காத பசுமை... வெறும் ஜீவாமிர்தத்தில் இருக்கிறதே என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.இதை நம்பவே முடியவில்லை என்றும் பலர் மெய் சிலிர்க்கிறார்கள்."

ஜீரோ பட்ஜெட் விவசாயம், மகாராஷ்டிராவில் கருவாகிகர்நாடகத்தில் உருவாகிதமிழ்நாடுகேரளா என்று செழிக்க ஆரம்பித்து... இன்றைக்கு இலங்கை, நேபாளம், இந்தோனேஷியா, கொரியா, தாய்லாந்து, தென் அமெரிக்கா... என்று உலக நாடுகள் பலவற்றிலும் தழைத்தோங்க ஆரம்பித்துவிட்டது. ஜீரோ பட்ஜெட் விவசாய முறையில் கடல் கடந்து பல நாடுகளில் வேர்விடத் தொடங்கி, வெற்றிக்கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவை நோக்கி, மேற்கண்ட நாடுகளில் இருந்து விவசாய ஆர்வலர்கள் அணிவகுக்கிறார்கள்.

வெளிநாடுகளை வியக்கவைத்த ஜீவாமிர்த மகத்துவம்../ லாபத்தைக் கூட்டும் ஜீவாமிர்தம்.../

 

ஜீவாமிர்தம் (வளர்ச்சி ஊக்கி) தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் மற்றும் அவற்றை சேகரிக்கும் முறை:

நாட்டு பசு மாட்டின் பசுஞ்சாணம் -10 கிலோ (10), நாட்டு பசு மாட்டுச் சிறுநீர் - 10 லிட்டர் (10), வெல்லம் (கருப்பு)- 2 கிலோ (2), பருப்பு வகை மாவு (உளுந்துதுவரைகொள்ளு ஏதாவது ஒன்று)- 2 கிலோ (2), தண்ணீர் (குளோரின் சேர்க்காதது) - 200 லிட்டர் (200), இத்துடன் பயிரிடப் போகும் நிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கைப்பிடி அளவு மண். பசுஞ்சாணம் சேகரிக்கும் போது அவை கிடைக்கும் அளவை உருண்டையாக பிடித்து வைக்க வேண்டும் ஏனென்றால் அவற்றின் ஈரப்பதம் மிக முக்கியமானது. பின்பு, பயன்படுத்தும் போது பிடித்து வைத்த உருண்டையின் மேல் காய்ந்தவற்றை நீக்கிவிட்டு ஜீவாமிர்தம் தயாரிக்கவும்.  முறையே, பசுங்கோமியத்தையும் சூரிய ஒளி இல்லா இடத்தில் சேகரித்துதயாரிக்கவும். இதில் நிலத்தின் கைப்பிடி மண்ணை சேர்ப்பதின் காரணம் அவற்றில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் ஊட்டச்சத்துகளை மேம்படுத்த சேர்க்கப்படுகிறது.

 

. எண்

தேவையான பொருட்கள்

அளவுகள்

1.

பசுஞ்சாணம்

  10 கிலோ

2.

மாட்டுச் சிறுநீர்

  10 லிட்டர்

3.

வெல்லம்

    2  கிலோ

4.

பருப்பு வகை மாவு

    2 கிலோ

5.

தண்ணீர்

200 லிட்டர்

6.

நிலத்தின் மண்

கைப்பிடி அளவு

தயாரிப்பு முறை:

தொட்டி அல்லது பிளாஷ்டிக் கேனில் தயாரிக்கலாம். மேற்கூறிய நாட்டுப் பசுஞ்சாணம்நாட்டுப் பசு மாட்டுச் சிறுநீர்வெல்லம்,  மண் ஆகியவற்றை சரியான அளவுகளில் சேர்த்து நன்கு கட்டி இல்லாதவாறு கரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 200 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு, இவற்றை 48 மணி நேரம் அதாவது இரண்டு (2) நாட்கள் சூரிய ஒளி படாமல் மர நிழலான இடத்தில் வைத்து மூடி வைப்பது முக்கியம். பிறகு, காலை, மதியம், மாலை என்று மூன்று முறை பசும்மூங்கில் குச்சியைக் கொண்டு கடிகாரச் சுற்றுப்படி இதை கலக்கி விடவேண்டும். இக்கரைசலை ஜீவாமிர்தம் (வளர்ச்சி ஊக்கி) என்பர்.

செயல்படுத்தும் முறை:

மிகவும் எளிமையான செயல்படுத்தும் முறை பாசன நீரிலேயே கலந்து விடலாம். இது ஒரு ஏக்கருக்கான அளவு.

இதனுடைய பயன்:

ஜீவாமிர்தம், அனைத்து விதமான பயிர்களின் வளர்ச்சி ஊக்கத்திற்கு பயன்படுத்தபடுகிறது. 1 கிராம் மண்ணில் 5 லட்சம் மேலாக நுண்ணுயிரிகள் இருக்கின்றது. இவை ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் இரட்டிப்பு வேகம் பெருகுகிறது. பூச்சிகள் தாக்குவதில்லை. நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. வயதான மரங்களும் காய்க்கின்றன.

முந்தைய பகுதி பீஜாமிர்தம்

1))பீஜாமிர்தம்

அடுத்த பகுதி பஞ்சகாவ்யா வளர்ச்சி ஊக்கி மற்றும் விதைநேர்த்தி

2)பஞ்சகாவ்யா வளர்ச்சி ஊக்கி மற்றும் விதைநேர்த்தி

What's Your Reaction?

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0