இயற்கை விவசாயத்தில் விதைநேர்த்தியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும் பஞ்சகவ்யா

"மயிலே, மயிலே இறகு போடுனு சொன்னா... போடவே போடாது. அதேமாதிரிதான் விவசாயமும். 'விலை கிடைக்கல...விலை கிடைக்கலனு புலம்பிக்கிட்டே இருந்தா, ஒன்னும் நடக்காது. விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பங்களை கவனமா செயல்படுத்தனும். எப்போ, ஒரு விவசாயி வியாபாரியாவும் மாறுவாரோ..அப்பதான் அவர் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும்." அதுபோலவே, எப்போ பயிர்கள் பூச்சிகள் தாக்கம் இல்லாமல்...அறுவடை செய்யப்படுகிறதோ அப்பதான் அப்பயிருக்கு தகுந்த முழு லாபம் கிடைக்கும்.

இயற்கை விவசாயத்தில் விதைநேர்த்தியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும் பஞ்சகவ்யா

இயற்கை விவசாயத்தில் விதைநேர்த்தியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும் பஞ்சகவ்யா

"மயிலே, மயிலே இறகு போடுனு சொன்னா... போடவே போடாது. அதேமாதிரிதான் விவசாயமும். 'விலை கிடைக்கல...விலை கிடைக்கலனு புலம்பிகிட்டே இருந்தா, ஒன்னும் நடக்காது. விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பங்களை கவனமா செயல்படுத்தனும். எப்போ, ஒரு விவசாயி வியாபாரியாகவும் மாறுவாரோ.. அப்பதான் அவர் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும்." அதுபோலவே, எப்போ பயிர்கள் பூச்சிகள் தாக்கம் இல்லாமல்... அறுவடை செய்யப்படுகிறதோ அப்பதான் அப்பயிருக்கு தகுந்த முழு லாபம் கிடைக்கும்.

"ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் மற்றும் பாரம்பரிய இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றியும் நாம் இந்த தொடர்க் கட்டுரைகளில் விவரித்து வருகிறோம். இன்று, இவ்விரண்டு தொழில்நுட்பங்களின் விளக்க அட்டவணை கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றின் சரியான புரிந்து கொள்ளுதல் தான். அவற்றை, செயல்படுத்துவதற்கான முறையான வழி. இத்தொடர்ப்பதிப்பின் நோக்கம் இயற்கை விவசாயத்தின் புரிதலை ஏற்படுத்தி அவற்றை செயல்படுத்த வைப்பதுதான்.

பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் உயிர் நாடி பஞ்சகவ்யா....


பஞ்சகவ்யா (விதை நேர்த்தி, வளர்ச்சி ஊக்கி, பூச்சி விரட்டி) தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் மற்றும் அவற்றை சேகரிக்கும் முறை: (20 லிட்டர் பஞ்சகவ்யா)

பசுஞ்சாணம் -5 கிலோ (5kg), மாட்டுச் சிறுநீர் - 3 லிட்டர் (3lts), காய்த்து ஆற வைத்த பால் - 2 லிட்டர் (2lts),தயிர் - 2 லிட்டர் (2lts),நெய் - 500 கிராம் (500 kg), நாட்டுச்சக்கரை- 1 கிலோ (1kg) அல்லது கரும்பு சாறு 2 லிட்டர் (2lts), வாழைப்பழம் (12No), இளநீர் 2 லிட்டர் (2lts), ஈஸ்ட்- 100 கிராம் (100grm) அல்லது தெண்ணைக்கள்ளு 2 லிட்டர் (2lts), தண்ணீர் - 3 லிட்டர்(3lts). பசுஞ்சாணம் சேகரிக்கும் போது அவை கிடைக்கும் அளவை உருண்டையாக பிடித்து வைக்க வேண்டும். ஏனென்றால் அவற்றின் ஈரப்பதம் மிக முக்கியமானது. பின்பு, பயண்படுத்தும் போது பிடித்து வைத்த உருண்டையின் மேல் காய்ந்தவற்றை நீக்கிவிட்டு தயாரிக்கவும். முறையே, பசுங்கோமியத்தையும் சூரிய ஒளி இல்லா இடத்தில் சேகரித்துதயாரிக்கவும். இதில் ஈஸ்ட்- 100 கிராம் (100lts) அல்லது தெண்ணைக்கள்ளு 2 லிட்டர் (2kg) சேர்ப்பதின் காரணம் அவற்றில் நொதித்தல் திறனை மேம்படுத்த சேர்க்கப்படுகிறது.

. எண்

தேவையான பொருட்கள்

அளவுகள்

1.

பசுஞ்சாணம்

5 கிலோ

2.

மாட்டுச் சிறுநீர்

3 லிட்டர்

3.

பால்

3 லிட்டர்

4.

தயிர்

3 லிட்டர்

5.

நெய்

500 கிராம்

6.

நாட்டுச்சக்கரை

1 கிலோ

7.

 வாழைப்பழம்

12   No’s

8.

இளநீர்

3 லிட்டர்

9.

ஈஸ்ட்

100 கிராம்

10.

தண்ணீர்

3 லிட்டர்

தயாரிப்பு முறை: (21 நாட்கள்)

மண்பானை அல்லது மூடி உள்ள பிளாஷ்டிக் கேனில் (30-50 லிட்டர் கொள்ளளவு) தயாரிக்கலாம். மேற்கூறிய பசுஞ்சாணத்தை 500 கிராம் நெய்யுடன் நன்கு பிசைந்து உருண்டையாக பிடித்து பாத்திரத்தில் வைத்து மூன்று நாட்கள் காற்று புகாமல் முடிவைக்க வேண்டும். நான்காம் நாள் மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர், காய்த்து ஆற வைத்த பால்தயிர்இளநீர் தலா 2 லிட்டர் மற்றும் தோல் நீக்கி நன்கு பிசைந்த வாழைப்பழங்கள் 12 - ஐ சேர்த்து நன்கு கட்டி இல்லாதவாறு கலக்கி விட வேண்டும். பின்னர் ஏழாம் நாள் அளவும் இக்கரைசலை பச்சை மூங்கில் குச்சியைக் கொண்டு கடிகாரச் சுற்று படி 20-30 முறை காலைமாலை என்று இரு வேளைகள் கலக்கி விட வேண்டும். பின்னர் ஏழாம் நாள் இதனுடன் 1 கிலோ நாட்டு சர்க்கரை 3 லிட்டர் தண்ணீரையும் சேர்த்து நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும். பின்புஇவற்றை நான்கு(4) நாட்கள் சூரிய ஒளி படாமல் மர நிழலான இடத்தில் மூடி வைப்பது முக்கியம். பிறகு, காலை, மாலை என்று முன்னர் கூறிய படியே செய்ய வேண்டும். 11 ஆம் நாளில் ஈஸ்ட்- 100 கிராம் அல்லது தெண்ணைக்கள்ளு 2 லிட்டரை இக்கரைசல் உடன் சேர்த்து 21 நாள் அளவும் கலக்கி விட வேண்டும். இவற்றை பஞ்சகவ்யா (விதை நேர்த்திவளர்ச்சி ஊக்கிபூச்சி விரட்டி) என்பர்.
குறிப்பு : தயாரிக்கும் போது நாற்றம் வீசும் பின்பு நாட்கள் சென்று 21 ஆம் நாளில் நொதித்த பழ வாசனை வீசும்.

செயல்படுத்தும் முறை:

மிகவும் எளிமையான செயல்படுத்தும் முறை 5 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை பாசன நீரிலேயே கலந்து விடவேண்டும் அல்லது மருந்து தெளிப்பான் மூலம் 1 லிட்டருக்கு 30 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து பயன்படுத்தவும்.15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.நெல் மணிகள் தோன்றிய பின்னர் பஞ்சகவ்யா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

 

இதனுடைய பயன்:

பஞ்சகவ்யா, அனைத்து விதமான பயிர்களின் வளர்ச்சி ஊக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 1 கிராம் மண்ணில் 5 லட்சம் மேலாக நுண்ணுயிரிகள் இருக்கின்றது. இவை ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் இரட்டிப்பு வேகம் பெருகிறது, பூச்சிகள் தாக்குவதில்லை, நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது, வயதான மரங்களும் காய்க்கின்றன.பயிர் வேர் அழுகல் நோய் தடுக்கப்படுகிறது.

வஎண்

பாரம்பரிய இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள்

1.

பலதானிய விதைப்பு

2.

விதைநேர்த்தி

3.

பஞ்சகவ்யா

4.

அமிர்தக்  கரைசல்

5.

அரப்புமோர்  கரைசல்

6.

தேமோர்  கரைசல்

7.

இ.எம்.திறமி

8.

வேப்பங்கொட்டைக் கரைசல்

9.

மூலிகைப்பூச்சி விரட்டி

 

 

வஎண்

ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள்

1.

ஜீரோ பட்ஜெட்

2.

பீஜாமிர்தம்

3.

ஜீவாமிர்தம்

4.

கனஜீவாமிர்தம்

5.

நீம் அஸ்திரம்

6.

பிரம்மாஸ்திரம்

7.

அக்னி அஸ்திரம்

8.

சுக்கு அஸ்திரம்

9.

மூடாக்கு

பஞ்சகவ்யா நுண்ணுயிர் பெருக்கத்தின் அமுதசுரபி என்று போற்றப்படுகிறது !

முந்தைய பகுதி ஜீவாமிர்தம் - ஒரு வளர்ச்சி ஊக்கி

ஜீவாமிர்தம் - ஒரு வளர்ச்சி ஊக்கி

What's Your Reaction?

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0