தமிழ்நாட்டு நாய் இனங்கள் பகுதி 1

அரசன் முதல் ஆண்டி வரை பண்டைய காலங்களில், ஏன்? இக்காலத்திலும் மக்கள் தங்கள் பாதுகாப்பை தாங்கள் வளர்க்கும் நாய் இனங்களை கொண்டே உறுதி செய்கிறார்கள். அந்நாய் இனங்கள் தன் எஜமானனின் உணவின் மிச்சத்தை உண்டு, தன் எஜமானனின் மேல் கொண்ட விஸ்வாசத்தின் உச்சத்தில் நின்று, தன் உயிரின் அச்சத்தை வென்று, தன் எஜமானனை தாக்கிய மிருக உயிரின் சொச்சத்தை கொன்று, நித்தம் அவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து வந்தது என்றால் அது மிகை ஆகாது.

தமிழ்நாட்டு நாய் இனங்கள் பகுதி 1

தமிழ்நாட்டு நாய் இனங்கள்

அரசன் முதல் ஆண்டி வரை பண்டைய காலங்களில், ஏன்? இக்காலத்திலும் மக்கள் தங்கள் பாதுகாப்பை தாங்கள் வளர்க்கும் நாய் இனங்களை கொண்டே உறுதி செய்கிறார்கள். அந்நாய் இனங்கள் தன் எஜமானனின் உணவின் மிச்சத்தை உண்டு, தன் எஜமானனின் மேல் கொண்ட விஸ்வாசத்தின் உச்சத்தில் நின்று, தன் உயிரின் அச்சத்தை வென்று, தன் எஜமானனை தாக்கிய மிருக உயிரின் சொச்சத்தை கொன்று, நித்தம் அவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து வந்தது. என்றால் அது மிகை ஆகாது.

     உலகமுழுவதையும் கொரோனா கொல்லை நோய் பல புறம் பயமுறுத்த, இது இல்லாமல் ஆம்பன் புயல் உருவாகி மற்றொரு புறம் இந்திய மக்களை பீதியடைய செய்து அழிவுகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இதற்கிடையில், உலக அரசாங்காங்கள் பல்வேறு திட்டங்கள் முலம் இயற்கை தற்சார்பு முறையில் தங்கள் நாடுகளில் இனிவரும் காலங்களில் தன் நாட்டுமக்களை வழிநடத்த போவதாக விவாதங்கள் எழுந்துள்ளது. இதற்கான விளக்கத்துடன் இன்றைய தலைப்பை காண்போம். முதலில்,  இயற்கை தற்சார்பு முறை என்றால் என்ன? ஒவ்வொரு மனிதனும் தன்னையும், தன்னை சுற்றியுள்ள சமுகத்தை சார்ந்து தனக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இயற்கை முறையில் நவின தொழிற்நுடபத்தின் மூலம் உற்பத்தி செய்து அவற்றை அச்சமுகத்தில் பகிரந்து கொள்வதுதான். இங்கு, சமுகம் என்று குறிப்பிடுவது வெறும் மனித இனத்தை மட்டும் அல்ல அவர்களுடன் சேர்ந்து வாழ இயற்கையால் படைக்கப்பட்ட பல்வேறு தரப்பட்ட நாட்டு, காட்டு விலங்குகளையும் உள்ளடக்கியவை தான் வளமான சமுகம். ஏன் இந்த பதிப்பு தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் போகிறது என்று யோசிக்கிறிர்களா?  இல்லை, இயற்கை தற்சார்புடன் இப்பதிப்பிற்கு மட்டும் சம்பந்தம் அல்ல முன் பதிவிட பட்ட அனைத்து பதிப்பிற்கும் சம்பந்தம் உண்டு என்பதை அலசி ஆராய்ந்து பாருங்கள். நல்ல மாற்றம் என்பது நம் கண் முன் இருக்கும் விவசாயம் மற்றும் அவற்றை நம்பிருக்கும் ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவற்றில் இருந்து தொடங்கட்டும். ஒரு  பிரச்சனையை அதன் வேரிலிருந்து சரிபடுத்த வேண்டும். வாருங்கள் நாம் நாட்டு நாயிங்களின் சிறப்பை காண்போம்.

பண்டைய தமிழகத்தில் அரசனின் படைவீரர்களுக்கு போர் களத்திலும், விவசாயியின் கால்நடைகளுக்கு போர் அடிக்கு களத்திலும் நம்நாட்டு நாய் இனங்கள் பாதுகாப்பு வழங்கி அவர்களின் செல்வங்களை அழிவிலிருந்து காப்பாற்றி கரைச் சேர்த்தது. இவ்வாறு, போரில் அரசனுக்கு வெற்றியை தேடி தந்த அந்த விஸ்வாச இனங்களின் புகழை அழியாமல் ஆலயக்கட்டிட கற்களில் சிற்பம் செதிக்கியும், உலோகங்களில் சிலை வடித்தும், அவற்றின் பெருமையை தன் தலைமுறைக்கு தெரியப்படுத்தினான் மனிதன்.

     விவசாயத்திலும் நாய் இனங்களின் பங்கு பெரியவை. காலையில் கால்நடைகளை மேச்சலின் போது கொடிய விலங்குகளிடமிருந்தும், இரவில் மந்தையில் திருடர்களிடமிருந்தும் பாதுகாத்து வந்தது. பண்ணைக் காவலிலும் திறம் வாய்ந்தவை இந்நாட்டு நாய் இனங்கள். இப்பணி மிகவும் ஆபத்தானவை. ஏனென்றால், பண்ணைக் காவல் என்பதை காட்டு காவல் என்பர் இவற்றை மனிதர்களால் மட்டும் தணித்து செய்ய முடியாது இதில் மனிதன் நாயினங்களின் உதவியை நாடினான் என்றால் அதுவே உண்மை. பண்ணைநிலங்களில் பல்வேறு தரப்பட்ட பயிர்கள் விளைவிக்கப்படும் அவற்றை உண்ணவும், சேதப்படுத்தவும் காட்டு  மிருகங்கள் இரவில் வருவதுண்டு அவை எதுவானபோதும் (எலி முதல் புலி வரை) எதிர்த்து  தனித்தோ அல்லது இரண்டு, முன்று கூட்டு சேர்ந்தோ போராடி விரட்டி அடித்தன.

மேற்கூறிய சிறப்பு பண்புகள் எல்லாம், உலகம் முழுவதிலும் வளர்கப்பட்டு வந்த பல்வேறு தரப்பட்ட நில அமைப்பிற்கு ஏற்ற அந்நாட்டு, நாட்டு நாய் இனங்கள் அனைத்திற்கும் பொருந்தும். அவற்றில் சில இனங்கள் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் தாண்டி பல மனிதர்களால் வளர்க்கப்பட்டு தன்னை புதிய காலநிலைக்கு ஏற்றாற்போல் தகவமைத்துக் கொண்ட நாய் இனங்கள் இன்றளவும் இருக்கதான் செய்கின்றன. இவ்வாறு, அந்நிய நாயினங்களின் வருகையால், பூர்வீக நாட்டு நாயினங்கள் பராமரிப்பவர் அல்லாமல் தெருவீதிகளில் அநாதைகளாக அலைந்தன. பின்பு இவ்வினங்களுக்குள் கலப்பு ஏற்பட்டு அற்றின் தனிசிறப்பை எழந்தது மட்டும் இல்லாமல் சில இனங்கள் அழிந்தே போய்விட்டன. இவ்வழிவிற்கு மேலைநாட்டு நாயினங்களின் வருகை மட்டுமே காரணம் என்றால் அது அபத்தம் (அநியாயம்). ரேபிஸ் போன்ற நோய்களால் நாய்களுக்கு வெறியேரி மனிதர்களைத் தாக்கியதால் பல நாயினங்கள் அடித்தும், சுட்டும் கொல்லப்பட்டன. இயற்கை சார்ந்த விவசாயத்தை கைவிட்டது, கிராமங்களை விட்டு நகரங்களில் குடிபெயர்ந்தது, நகரவீடுகளை விட்டு அடுக்குமாடிகளில் குடியேரியது போன்ற பல காரணங்களை அடுக்கிகொண்டே போகலாம். எது எதுவான போதும், தமிழ்நாட்டில் இருந்த, இருக்கின்ற நாயினங்கள் யாவை? அவற்றின் தற்போதைய நிலை என்ன? என்று, இத்தலைப்பை நாம் இரண்டு பதிப்பாக காணப்போகிறோம். முதல் பதிப்பான இப்பதிப்பில் கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாயினங்களில் முதல் ஐந்தை பார்ப்போம். பின் அடுத்தப் பதிப்பில் மற்றவற்றைக் காண்போம். தமிழக நாயினங்களை கீழ் கண்டவாறு வரிசைப்படுத்தியதற்கான காரணத்தையும், உலக நாயினங்கள் எப்படி தோன்றின என்ற வரலாற்றையும் அடுத்தப் பதிப்பில் தொடச்சியாக காண்போம்.

  1. அலங்கு நாய்
  2. செங்கோட்டு நாய்
  3. கோம்பை நாய்
  4. ராமநாதபுரம் மண்டை நாய்
  5. கட்டைகால் நாய்
  6. மலையேறி நாய்
  7. கொச்சி நாய்
  8. கண்ணி நாய்
  9. சிப்பி பாறை நாய்
  10. ராஜபாளையம் நாய்
  11. சொனங்கி நாய்

 

அலங்கு நாட்டு நாய் இனம் :

       முதலில் இவ்வினத்தை குறிப்பிடுவதர்க்கு காரணம் இப்போழுது அலங்கு நாயினம் அழிந்து போய்விட்டது. முன்னுரையில் கூறிய கல்வெட்டு சிறப்பு இதற்கு உண்டு, அக்காலத்தில் ராஜாக்கள் போன்ற செல்வம் படைத்தவர்களால் மட்டும் வளர்க்கப்பட்டு வந்த நாயினம். ஏனென்றால், இதை கயிறுபோட்டு கட்டுவதற்கே இரண்டு போர்வீரர்கள் தேவைப்பட்டனர். தமிழ்நாட்டு நாயினங்களிலேயே பெரிய உடலமைப்பை உடையது, மிகவும் ஆக்ரோஷமானது, ஒரு எஜமானால் மட்டும் கட்டுப்படுத்தபடும் வெகு சில உலக வேட்டை நாய் இனங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டும் அல்லாமல் இதன் கடிக்கும் திறனை (Biting Force)  மற்ற நாய்களுடன் அல்ல காட்டு மிருகங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு மிக அழுத்தமானது, ஆபத்தானது. இந்நாயினம் அழிந்தற்கு இந்த ஆக்ரோஷமான தாக்கும் தன்மையும் முக்கிய காரணம். மன்னர் காலம் முடிந்த பின்னர் இவற்றை வளர்ப்பதற்கு தடைகள் சட்டங்கள் மூலம் இயற்றப்பட்டதும் ஒரு காரணம். 

சிறப்புகள்

     தஞ்சை பெரியகோவிலில் கிழக்கு கோபுரத்தில் இந்நாயின் உருவம் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

பின்பு கோவில் உட்புறச் சுவர்களில் அலங்கு நாயின் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

 

தோற்றம்

உயரம் 27” (inch)-28” (inch), எடை 40-45 , இவற்றின் காதுகள் குத்தாக டாபர்மேன் போலவும், சற்று மண்டையில் இருப்பது போன்றும், தாடைகளை சுற்றி கறுப்பாக சதைகளும், வால்கள் வளைந்து காணப்படும்.  அலங்குநாயின் தோற்றத்தில் இன்று, வடமாநிலங்களில் வளர்கப்பட்டு வரும் புள்ளி குட்டா, பஞ்சாப் மாஷ்டிவ், பாக்கிஸ்தானி மாஷ்டிவ் போன்ற நாயினங்கள் ஒத்த வடிவம் கொண்டவைகளாக உள்ளன வெகுசிலர் இவற்றை அலங்குநாய் என்றும் அழைக்கின்றனர். ஆனால், உண்மையில் அலங்குநாய் இனம் அழிந்து விட்டது.

நிறம்

     அலங்கு நாயினம் வெள்ளை, கருப்பு மற்றும் சந்தன நிறங்களில் சிறிய ரோமங்களுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

செங்கோட்டு அல்லது செங்கோட்டை நாய்

     செங்கோட்டு நாய் மேற்கு தொடர்ச்சி  மலை பகுதி மற்றும் திருவனந்தபுரம் பகுதியில் அதிகம் காணப்பட்ட நாயினம் ஆகும். தற்போது அழிந்து போன இனமாக பார்க்கப்படுகிறது. ஆனபோது, மளையாள மனோரம்மா நாளிதழில் செங்கோட்டை நாயைப்பற்றி பதிவு ஒன்று 2008-யில் வெளியாகி இருப்பதும். பின்பு, திரிசூரில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற நாய் கண்காட்சியில் இந்நாய் பங்கேற்றதாக செய்திகள் பரவியதும் இன்றும் செங்கோட்டை நாயினம் சிலரால் மலை அல்லது காட்டுப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரலாம் என்ற சந்தேகத்தை நாய் பிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. என்ற போதும் இவற்றின் உருவம் ஓவியமாக மட்டுமே இணையத்தில் வலம் வருகின்றன. தற்போதிய புகைப்படம் ஒன்றும் கிடைக்க வில்லை. இரண்டு செங்கோட்டு நாய் ஒன்று சேர்ந்து ஒரு புலியை எதிர்த்து போராடும் திறன் பெற்றவை அப்போராட்டத்தில் இவை இறந்தும் போகலாம் ஆனால், இவை பின்வாங்குவதில்லை என்ற சிறப்பு வரலாறு செங்கோட்டு நாய்களுக்கு உண்டு.

பெயர் காரணம்

     அடர் செம்பழுப்பு நிற மெலிர்கின்ற தோல் உடல் முழுவதும் போர்த்தியபடி இருப்பதால் இவற்றிற்கு செங்கோட்டு அல்லது செங்கோட்டை நாய். வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

தோற்றம்

மண்டை அகன்று பெரிதாகவும், முக்கு பகுதியை சுற்றிலும் கறுப்பு நிறம் சூழ்ந்திருக்கும். காது மடல்கள் மடிந்தும் காணப்படுகிறது. பெரிய, வலுவான தாடைப் பகுதியையும், கூரிய பற்களையும் உடையது. கம்பீரமான முன் தோற்றதையும், கட்டான உடல் வாகைக்கொண்ட  நாயினம். இவை பார்ப்பதற்கு ரொடிசன் ரிச் பக் நாய்கள் போன்ற ஒத்த வடிவம் கொண்டவை.

ஒரு எஜமானால் மட்டும் கட்டுப்படுத்தபடும் இனங்களில் இதுவும் ஒன்று. உயரம் 23”(inch)  முதல் 29” (inch) வரையும் வளரகூடியது. எடை  சுமார் 35 முதல் 42 கிலோ வரையிலும்,  ஆயுட்காலம் 14 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.   

நிறம்

     உடல் முழுவதும் அடர் செம்பழுப்பு நிறம் கொண்டவை, முக்கு பகுதியை சுற்றிலும் கறுப்பு நிறம் சூழ்ந்திருக்கும். நிற ஒற்றைமையில் இவை கோம்பை இன நாயைப் போல் இருக்கிறது.

கோம்பை நாய்

     தேனி மாவட்டம் கோம்பை எனும் பகுதியில் முதன்முதலில் இந்நாயினம் தோன்றி பரவலாக தேனி மக்களாலால் வளர்க்கப்பட்டு இன்று உலக அரங்கில் இந்திய நாய் இனங்களின் முதன்மை பட்டியலில் இடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை தேடிதந்த தமிழ்நாட்டு நாய் இனங்களில் இதுவும் ஒன்று. விவசாயக் காவல் வேலையில் 600 – 700 வருடங்களாக  சிறந்து விளங்குகிறது. மோப்ப சக்தியிலும் (Scent hounds dogs), சராசரியாக 45 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை (Athletic  body structure dog) , பார்வை திறன் (Sight hounds) அதிகம் கொண்ட நாயின வரிசையிலும் இவை இடம் பிடிக்கின்றன.

பெயர் காரணம்,

இவ்வினம் தோன்றிய கோம்பை என்ற ஊரின் பெயரையே இந்நாயினத்திற்கும் சூட்டி பெருமைப்படுத்தி அழகுப் பார்த்தனர் அப்பகுதி மக்கள். இவற்றை வாய் கருப்பு செவலை, தேனி கோம்பை நாய் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

சிறப்புகள்

இங்கிலாந்து எலிசபெத் மகாராணியின் அரண்மனையை அலங்கரித்த  பொலிகர்  நாயினம் கோம்பை நாய்கள். மருது சகோதரர்களால் வளர்க்கப்பட்டு போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எஜமானின் குடும்பத்துடன் ஒரு குழந்தை போலவும், அவர்களை எதிர்த்து வரும்  மிருகத்திற்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியது என்பது வரலாறு.

இவை, எல்லை அமைத்து காவல் செய்யும் மிருகப் பண்பில் தலைசிறந்தது. ஏனென்றால், இவற்றின் பிறப்பு அப்படி,  செந்நாயுடன் நாய்களின் கலப்புதான் கோம்பை நாயினம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

இவற்றின் தனிச்சிறப்பு தோற்றம் மற்றும் நிறத்தை வைத்து வகைப்படுத்த முடியாது. ஏனென்றால், கோம்பை நாய் ஒரே தோற்றத்தையும் ஒரே நிறத்தையும் கொண்டவை.

தோற்றம்

     மண்டை பகுதியில் ஆப்பிள் பிளவு (Apple Cut) என்னும் அழகிய வளைவான நெற்றி கண்களுக்கு மேல் காணப்படுகிறது. கண் மற்றும் முக்கு பகுதியை சுற்றிலும் கறுப்பு நிறம் சூழ்ந்திருக்கும். காது மடல் சற்று மடிந்தும், குத்து காது கொண்டவைகளாகவும், காதின் உட்பகுதியில் கருப்பு கலந்தும் காணப்படுகிறது. பெரிய, வலுவான தாடைப் பகுதியையும், கூரிய பற்களையும் உடையது. கம்பீரமான முன் தோற்றதையும், கட்டான மார்பு மற்றம் உடல் பகுதிகள், வலிமையான பின்னங்கால்களையும், சுருண்ட வால் பகுதியை கொண்டது. உயரம் 22”(inch)  முதல் 27” (inch) வரையும் வளரகூடியது. எடை 30 கிலோ முதல் 35 கிலோ வரை காணப்படுகிறது. ஆயுட்காலம் 13 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. உலகையே கலக்கி கொண்டிருக்கிற பெல்ஜியம் மெலினியோஸ் (Belgian malinos) நாய்களுடன் கோம்பை நாயினங்களின் தோற்றம் ஒப்பிடப்படுகிறது.

நிறம்

     உடல் முழுவதும் ஒரே நிறமாக பழுப்பு மற்றும் அடர் செம்பழுப்பு நிறம் கொண்டவை, முக்கு  மற்றும் கண் பகுதியை சுற்றிலும் கறுப்பு நிறம் சூழ்ந்திருக்கும். ஒரு மெல்லிய கருப்பு கோடு முதுகு பகுதியில் கழுத்திலிருந்து வால் வரை செல்கிறது.

         

ராமநாதபுரம் மண்டை நாய்

 ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாவட்டகளிலும் பரவலாக காணப்படும் நாயினங்கள் இவைகள். வீட்டுக் காவல், தோட்டக் காவல், (கோழி, காடை, ஆடு) பண்ணைக் காவல் போன்ற இப்பகுதியின் விவசாயக் காவல் வேலையில் 700 – 800 வருடங்களாக  சிறந்து விளங்குகிறது. அது மட்டுமின்றி காட்டுப் பன்றி வேட்டை, எலி வேட்டையிலும் தடம் பதித்து நாயினங்களுக்கே உரிய எல்லா வேலைகளையும்  செய்து தமிழ்நாட்டு நாய் இனங்களில் இன்றி அமையாதவையாக வலம் வருகின்றன. சராசரியாக 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை.

 

பெயர் காரணம் 

ராமநாதபுரம் பகுதி அதிகம் காணப்பட்டதாலும், அதன் மண்டை அகன்று பெரிதாக இருந்ததாலும் இவ்வினத்திற்கு ராமநாதபுரம் மண்டை நாய் என பெயர் வந்தது. அது மட்டும் இல்லாமல்,

இவற்றை ராமநாதபுரம் கோம்பை நாய் என அழைக்க காரணம் முன்கூறியபடி செந்நாயுடன் நாய்களின் கலப்புதான் கோம்பை நாயினம் என்பர். இக்கலப்பில் ஈடுபட்ட நாயினம் ராமநாதபுரம் மண்டை நாயாக இருக்கலாம் என்று விவாதிக்கப்படுகிறதே தவிர சான்று இல்லை. ராமநாதபுரம் மந்தை நாய் எனவும் அப்பகுதியில் பரவலாக அழைக்க காரணம் இவை, ஆட்டு மந்தைகளை திறன்பட வழிநடத்தி ஓநாயிடமிருந்து காக்கவல்லது.

சிறப்புகள்

இன்றளவும், இந்நாயினத்தின் பெருமையை தாங்கி நிற்கின்றன ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள நகர்கோவில் கோவில் கல்வெட்டுகள்.

ராமநாதபுரம் திருபுள்ளானி கோவில் தெப்பக்குள படிகட்டுகளில் சிற்பம் செதுக்கப்பட்டும் உள்ளது.

தோற்றம்

     இப்போதிய தமிழ்நாட்டு நாட்டு நாயினங்களில் பெரிய உடலமைப்பை பெற்றவை இவைகள் தான். எடை சுமார் 30 முதல் 40 கிலோ வரையிலும், தற்போது இருக்கு இந்நாயினத்தின் உயரம் 22”(inch)  முதல் 24” (inch) வரையும், முந்தைய காலங்களில் இவற்றின் உயரம்  32” (inch) வரையிலும் இருந்ததாக கணிக்கப்படுகிறது.

இதன் மண்டை  பகுதி அகன்று பெரிதாக இருக்கும், நீண்ட காது மடல்கள் தோங்கியவாறு இருக்கும், கழுத்து பகுதியில் தோல் சற்று சுருக்கமாகவும், கட்டான உடலமைப்பை கொண்டவையாகவும், வலுவான பின்னங்கால் தொடைகளையும் (Strong Femur),  உடலுக்கேற்ற பெரிய பாதங்களையும் (Strong Paws), தடிமனான வால் பகுதியையும் , சிறிய பல பலப்பான ரோமங்கள் (Short & Shine) கொண்டது. ஆயுட்காலம் 14 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

நிறம்

நாம் நாட்டு மாட்டு இனங்களில் நிறம் அடிப்படையில் பார்த்தோம் அல்லவா? அதே, போன்று இவ்வினநாய்களையும் நிறம் அடிப்படையில் வகைப்படுத்தி பெயரிடுகிறார்கள். இவ்வனைத்து, நிற நாய்களும் மேற்கூறிய தோற்றத்துடனும், நெற்றிப்பகுதியில் வெள்ளை நாமம் போன்ற அடையாளத்துடனும் காணப்படுகிறது.

சாம்பல் நிறம்

(Ash Color)

கருமரை

(Black & White Color)

புள்ளிமரை

(Black & White with black dot patches)

பாலமரைச் சாம்பல்

(White with Ash patches)

பாலமரை

(White & Red patches)

புள்ளிச்சாரல்

(Brindle Color)

பிள்ளை

(Fawn Color)

மயிலை

(White Color)

செவலை

(Red Color)

வெளிர்சாம்பல்

(White and Ash Color mix)

பழுப்பு மற்றும் வெள்ளை  

(Tan & White)

கரும்சாம்பல்

(Black and Ash Color mix)

 

 

கட்டைகால் நாய்

                மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது என்பர் இப்பழமொழிக்கு ஏற்ப கட்டைகால் நாய்கள் உயரத்தில் சிறியவை. ஆனால், மோப்ப சக்தியில் தமிழக நாயினங்களில் (Scent hounds dogs) தலைசிறந்தவை. ஏனென்றால், பொதுவாக நாய்களுக்கு  மோப்ப சக்தி மனிதனைவிட 40 மடங்கு அதிகம், இதற்கு காரணம் அவற்றின் மூக்கு பகுதியில் காணப்படும் சிறிய நுகர்ச்சி கண்ணரைகள் (Olfactory receptors cells for odor detection)  250 மில்லியன் என்ற அளவில் இருப்பதனால்தான். ஆனால், மோப்ப சக்தியில் கட்டைக்கால் நாய்கள் முதன்மை பெறக்காரணம் இவற்றிக்கு 300 மில்லியன் சிறிய நுகர்ச்சி கண்ணரைகள் இருக்கின்றன. தமிழகத்தில் இவற்றை சப்பாணி நாய் என்று அழைத்தார்கள் ஏனென்றால், கட்டைகால் நாயின் கால்கள் குட்டையாக காணப்படுகிறது. இவை, உலக குட்டை நாயினங்களான பாசட் ஹொண்ட், பீகள் மற்றும் டாஷ் ஹொண்டுகளுடன் ஒப்பிடப்படுகிறது. மீன், கீரி, முயல், எலி மற்றும் பாம்புகளை வேட்டையாடுகிற தைரியமுள்ள இனங்களுகுள் கட்டைகால் நாய்களும் பங்கு வகிக்கின்றன.

பெயர் காரணம்

     குட்டையான, வளைந்த கால்களை கொண்டதால் குட்டை நாய், சப்பாணி நாய் என்ற வழக்க பெயராகவும் கட்டைக்கால் நாய் என்ற பொதுப் பெயரையும் கொண்டவை இந்நாட்டு நாயினங்கள்

சிறப்புகள்

     தஞ்சை பெரிய கோவில் கிழக்கு கோபுரத்தில் சிதைந்த நிலையில், இரண்டு அலங்கு நாய்களின் சிறப்பத்திற்கிடையில் காணப்படுகிறது.. வேகமாக குழிப்பறித்து வேட்டையாடப்படும் காட்டு கீரி, முயல், எலி போன்றவற்றை அதன் பொந்தினுள் தலை மற்றும் உடலை நுழைத்து வேட்டையாடும் திறன் கொண்டவை. மர பொந்துகளினால் வாயில் இரத்தம் வந்தாலும் வேட்டைப்பொருளை அடைந்து பின்னர் வீடு திரும்பும் நாயினம். ஓடி வேட்டை ஆடாது ஏனென்றால் இவற்றின் ஓட்ட வேகம் குறைவு. பராமரிப்பது எளிதாக இருப்பதால் தமிழகக் காவல்துறையில் இந்நாயினத்தை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தோற்றம்

     குட்டையாக இருப்பதால் நீண்ட உடலை கொண்டவை போன்று காட்சி அளிக்கிறது. ஆனால், மிதமான உடலமைப்பை உடையது. இவற்றின் எடை  20 முதல் 30 கிலோ வரையிலும், இந்நாயினத்தின் உயரம் 15” (inch) குள் வரை மட்டுமே வளரக்கூடியது. கால்கள் வளைந்து காணப்படுகிறது. காது மடல்கள் மடங்கியும், குத்திட்டும் காணப்படுகிறது. வலிமையான தாடைப் பகுதி, கூர்மையான பற்கள் கொண்டவை. மிதமான பார்வைத்திறன் உடையவை. ஆயுட்காலம் 10 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

நிறம்

     இவை, பல வண்ணங்களில் காணப்படுகிறது. வெள்ளை, கருப்பு மற்றும் இரண்டும் கலந்து, சந்தன நிறம் மற்றும் பழுப்பு நிறம்.

தொடர்ச்சி இரண்டாம் பாகத்தில்......

தமிழ்நாட்டு நாய் இனங்கள் பகுதி-2

தமிழ்நாட்டு நாய் இனங்களை காப்போம்.....

What's Your Reaction?

like
4
dislike
0
love
4
funny
0
angry
0
sad
1
wow
2