தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டம் 2019
தமிழகத்தில் மாடுகள் மற்றும் எருமைகளின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக, "தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டம் - 2019" என்ற சட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. நேற்றைய முந்தின பதிப்பில் தமிழ்நாட்டு மாட்டு இனங்களின் பெயர்களையும், அவைகளின் தற்போதிய நிலைமையையும் பார்த்தோம். இச்சூழ்நிலையில் இந்திய அளவில் பல மாநிலங்களில் நிறைவேற்றி தற்போது தமிழ்நாட்டிலும் நிறைவேற்ற போகும் திட்டம்தான் இம்மாட்டின சட்டம். இவற்றை அரசு பார்வையில் எவ்வாறு விளக்கப்படுகிறது. கால்நடை ஆர்வளர்கள், கால்நடை அராய்ச்சியாளர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை பற்றி இப்பதிப்பில் அலசி ஆராய்ந்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்கச் சட்டம் 2019
ஏறத்தாழ எல்லா இயற்கை வளங்களையும் தொலைத்துவிட்ட நிலையில், உலகமே இன்று இயற்கை வளங்களை தேடி பின்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அப்படி நாம் தொலைத்த வளங்களில் ஒன்று கால்நடை வளம். காங்கேயம், உம்பளாச்சேரி, மணப்பாறை.... என ஒவ்வொரு பகுதிக்கும் மண்ணின் மணத்தோடு வாழ்ந்த நாட்டு மாடுகள், தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்ட வந்த மேலும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறதா? இந்த இனப்பெருக்கச் சட்டம்.
பாரம்பரியமாக இருந்து வந்த மாடுகளெல்லாம் பாலுக்காக கலப்பு செய்யப்பட்டு பால் கறக்கும் இயந்திரங்களாக மாறி வரும் காட்சிகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் 'பால் குடிப்பதே ஆபத்து. அதன் மூலம் பல்வேறு நோய்கள் பரவுகின்றன' என்கிற எண்ணம் தோன்றி கோஷம் கேட்க ஆரம்பித்து விட்டது.
மாடுகளில் திமில் உள்ளவை (Bos InFocus), திமில் இல்லாதவை (Bos taurus) என் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். பாலில் கால்சியம், வைட்டமின் மற்றும் புரதங்கள் கேசின் ஏ-1, கேசின் ஏ-2 இருக்கிறது. இதில், கேசின் ஏ-2 புரதச்சத்து திமில் கொண்ட நம்நாட்டு மாடுகளில் அதிகம் உள்ளது. இவை மனித உடலுக்கு நல்லது தரும் புரதச்சத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல்களுடன் வாருங்கள் இன்றைய தலைப்பினை ஆராய்வோம்.
இவ்வினப்பெருக்க சட்டத்தில் குறிப்பாக 'செயற்கைக் கருவூட்டல்' குறித்து நிறைய சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கால்நடை அமைச்சகத்தின் சார்பில் புதிதாக உருவாக்கப்படும் அமைப்பின் கீழ் கால்நடைகளை வளர்ப்போர் மற்றும் சினை ஊசி உற்பத்தியாளர்கள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும். அப்படியானால், சினை ஊசி உற்பத்தியாளர்களை அந்த அமைப்புச் சோதனைக்குட்படுத்த முழு அதிகாரம் வழங்கப்படும். இத்திட்டதில் கிடேறிக்கன்றுகள் (பசுங்கன்றுகள்) மட்டுமே பிறக்கும் வகையில் புதிய சினை ஊசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அது மட்டும் அல்லாமல், ஜெர்சி போன்ற வெளிநாட்டு மாட்டு இனங்களின் சினை ஊசிகளையும் அறிமுகப்படுத்த உள்ளனர். சினை ஊசி உற்பத்தி என்பது, ஆயிரக்கணக்கன கோடி புழங்கும் வர்த்தகம் என்பதை இங்கு, பதிவிட விரும்புகிறேன்.
சினை ஊசியின் விளை உயர வாய்ப்புள்ளதா?'
'பாரம்பரிய ரகக் கால்நடை வளர்ப்புக்கு பெரும் பதிப்பு உருவாகுமா?'
வெளிநாட்டு மாட்டு இனங்களை ஊக்குவிக்கும் சட்டமா?'
பின்வரும் காலத்தில் இவ்வமைப்பு தனியார்மயமாக்கப்படுமா?'
புதிய சினை ஊசிகளால் நாட்டு மாட்டுக் காளைகள் என்னவாகும்?'
அதனால், இந்த கேள்விகளை மனதில் கொண்டு அரசு தரப்பு விளக்கம், கால்நடை ஆர்வளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துகளை காண்போம்.
அரசு தரப்பு விளக்கம்:
கால்நடை துறை அமைச்சர் திரு. உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களால் இத்திட்டதின் ஆவணங்கள் கால்நடை பராமரிப்புத் துறையிடம் சமர்பிக்கப்பட்ட பின்பு, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் திரு. ஞானசேகர் அவர்களின் விளக்கம். நாட்டின் பால் உற்பத்தியை பெருக்கவும் (வெண்மை புரட்சி), நோய் கொண்ட கால்நடைகளின் சேர்க்கையால் உருவாகும் நோய் தொற்று கொண்ட கன்றுகளின் ஈற்றை குறைக்கவும், சினை ஊசி உற்பத்தியாளர்களின் பதிவை உறுதிசெய்து ஒழுங்குபடுத்தவும், அந்தந்த பகுதிக்கேற்ற இனங்களை முறைபடுத்தி சினை ஊசிகளாக வழங்கவும், கிடேறிக்கன்றுகள் (பசுங்கன்றுகள்) மட்டுமே பிறக்கும் வகையில் புதிய சினை ஊசிகள். அது மட்டும் அல்லாமல், ஜெர்சி போன்ற வெளிநாட்டு மாட்டு இனங்களின் சினை ஊசிகளையும் அறிமுகப்படுத்த உள்ளனர். முன்பிருந்த பொதுவான சினை ஊசி என்று மூன்று வகையான சினை ஊசிகள் கிடைக்க வகைச்செய்துள்ளோம் என்று விளக்கம் தந்துள்ளார்.
திருப்பூர் காங்கேயம் கால்நடை ஆராய்ச்சியாளர் கருத்து :
இதுகுறித்து திருப்பூர் காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் திரு. கார்த்திகேய சிவ சேனாதிபதி கூறியது, " சினை ஊசி வர்த்தகத்தை விரிவாக்கத்தான் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று முதலில் இருந்தே தெரிவித்து வருகிறோம். இப்போது வந்திருக்கும் தகவலும் அதைத்தான் சொல்கிறது. ஒரு சினை ஊசியின் விலை சராசரியாக 500 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், விவசாயிக்கு அதில் 200 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 1 கோடி மாடுகளுக்கு கணக்கு வைத்தால் 50,000 கோடி ரூபாய் வர்த்தகம் புழங்க வாய்ப்பிருக்கிறது. இது பதியாகக் குறைந்தால்கூட வருடத்திற்க்கு 25,000 கோடி ரூபாய் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும். இந்தச் சட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளும் பிரச்னைகளும் இருக்கின்றன.இது ஜனநாயகத்துக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கும் எதிரானது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து விவசாயிகளை அரசாங்கம் வஞ்சித்து வருகிறது".
கால்நடை ஆர்வளர் :
இதுபற்றிப் பேசிய வழக்கறிஞர் திரு. ஸ்ரீனிவாஸ், " அதிகமானோர் இந்தச் சட்டத்தைப் பற்றித் தெரியாமல் பேசுகின்றனர். பொலிக்காளைகளாகப் (சினை காளை) பயன்படுத்துவோர் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் எனச் சொல்லியப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டிற்கு மாடுகள் இந்த சட்டத்திற்குள் அடங்காது. அதற்காகப் பிரச்னை இல்லாத சட்டம் இது என்று சொல்லவில்லை. இந்த சட்டத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்பியே ஆக வேண்டும். இதில் காளைகளுக்கு மட்டும்தான் எல்லா விதிமுறைகளும புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. நன்றாக இருக்கும் காளைகள், நோய்வாய்ப்பட்ட பசுவுடன் இணையும்போது, புதிதாகப் பிறக்கும் கன்றுகள் குறைபாட்டுடன் பிறக்கும். இதுபற்றி எங்கேயும் பேசப்படவில்லை. இந்தச் சட்டத்தின் நோக்கம், ஒரு விவசாயியை மாட்டுச் சினை ஊசிக்குத் தனியாரைச் சார்ந்து இருக்க வைக்கும். புதிதாகக் கொடுக்கப்படும் சினை ஊசியில் பெண் கன்றுகள் மட்டுமே பிறக்கும்படி இருக்கப்போகிறது. இது நாட்டு மாட்டுக் காளைகளை முற்றிலும் காணாமல் போகச் செய்யும். ஆரம்பத்திலிருந்தே நாட்டு மாட்டுக் காளைகளை முற்றிலும் ஒழிக்க ஏதோ ஒரு சக்தி முயன்று வருகிறது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய சினை ஊசி வர்த்தகம் ஒளிந்திருக்கிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது அனைவரும் எதிர்துக் குரல் கொடுக்க வேண்டும். சட்ட ரீதியாகச் சந்திக்க வேண்டும் என்கிறார்.
இவற்றை முழுமையாக பால் புரட்சிக்காக மட்டும் கொண்டுவரும் திட்டம் போல் இருக்கிறது. இத்திட்டம் கூறிய புதிய ஊசிகள் பயன்பாட்டுக்கு வருமேயானால் வியாபார நோக்கம் கொண்டவர்கள் கிடேறிக்கன்றுகள் (பசுங்கன்றுகள்) மட்டும் பிறக்கும் ஊசியையே அனைவரும் பயன்படுத்த முன்னுரிமை அளிப்பார்கள். பின் நாட்களில் காளை மாடுகளின் நிலைமை என்னவாகும்?
நாம் ஏற்கனவே நம் பல நாட்டு மாட்டு இனங்களின் பெயரை மட்டும்தான் வைத்துகொண்டிருக்கிறோம். வியாபார நோக்கத்தால், பிற்காலத்தில் தற்போது உள்ள நாட்டு மாடுகளும் அழிந்துவிடுமோ? என்ற அச்சம் வருகிறது. எது எதுவான போதும், மீதம் இருக்கும் நாட்டு மாட்டு இனங்களை பாதுகாத்து நம் அடுத்த சந்ததிக்கு கொடுக்கும் பெருங்கடமை நம்மையே சாரும்.
பண்டைய தமிழக நாட்டு மாட்டு இனங்களைப் பற்றி அறிய