இயற்கை விவசாயத்தின் படிநிலைகள்

இந்த பெயரைக் கேட்ட உடனே நீங்கள் யூகித்திருப்பீர்கள்.ஆம், அதிக மூலதனம் இல்லாமல் இயற்கை முறையில் உரங்கள், பூச்சிக்கொல்லிகளை நாம் வளர்க்கும் நாட்டுப் பசு அல்லது மாடு ஒன்றைக் கொண்டே 30 ஏக்கருக்குக் கூட விவசாயம் பண்ணலாம்.

இயற்கை விவசாயத்தின் படிநிலைகள்

இயற்கை விவசாயத்தின் படிநிலைகள்

ஜீரோ பட்ஜெட் விவசாயம்

   இந்த பெயரைக் கேட்ட உடனே நீங்கள் யூகித்திருப்பீர்கள்.ஆம், அதிக மூலதனம் இல்லாமல் இயற்கை முறையில் உரங்கள், பூச்சிக்கொல்லிகளை நாம் வளர்க்கும் நாட்டுப் பசு அல்லது மாடு ஒன்றைக் கொண்டே 30 ஏக்கருக்குக் கூட விவசாயம் பண்ணலாம்.

 

 

இது உண்மையா?

 

     "உண்மைதான். நம்மை நோகடிக்கிற உரச்செலவு, பூச்சிக்கொல்லிச் செலவு இவைகளையெல்லாம் இல்லாமல் போகச் செய்யும் அருமையான ஜீரோ பட்ஜெட் தொழில் நுட்பத்தைத் தெரிஞ்சுகிட்டா... அதெல்லாம் சாத்தியம்தான்...."

     பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், நீம் அஸ்திரம், பீரம்மாஸ்திரம், அக்னி அஸ்திரம், சுக்கு அஸ்திரம், மூடாக்கு, மண்புழு உரம், பஞ்சக்காவியம், கசக்காவியம், மோர் கரைசல், முட்டைக்கரைசல், நெல்லிக்கரைசல், என்ன? மந்திரச்சொற்கள் போன்று தோன்றுகிறதா? இல்லை, இவைகள் இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விதைநேர்த்திகள், வளர்ச்சியூக்கிகள், நுண்ணுயிர் பெருக்கிகளின்  பெயர்கள். இவைகளை ஒவ்வொன்றாக இனிவரும் காலங்களில் காண்போம்.

 

ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன?

 

 

     நாம் இன்று செய்து வரும் விவசாயத்தில் பெரும்செலவை, நாம் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் வாங்க செலவிடுகிறோம். அவற்றில், இருந்து விடுபடவும், இயற்கை முறையில் ஆரோக்கியமான உணவுப்பொருட்களை பயிரிடவும், ஜீரோ பட்ஜெட் விவசாய தொழில் நுட்பம் நமக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் பசுமைப் புரட்சியோடு, பெறும் தொழிற் புரட்சியையும் இதன் முலம் செய்து காட்ட முடியும். ஜீரோ பட்ஜெட் விவசாய தொழில் நுட்பத்தில் விவசாயக் கழிவுகள் (வைக்கோல், கரும்புச்சக்கை, மக்காசோளத்தாள், தேங்காய் நார்க் கழிவு,மாட்டு எரு, பழக்கழிவுகள்...) போன்றவைகளிருந்தும்,

 

 

     நாட்டுப் பசு மாட்டிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், மாட்டுச்சாணம், மாட்டுச்சிறுநீர் போன்றவற்றையும் உரிய முறையில் பயண்படுத்தி இயற்கை உரங்கள்,பூச்சிக்கொல்லிகள்,விதைநேர்த்திகள், வளர்ச்சியூக்கிகள், நுண்ணுயிர் பெருக்கிகளின் தயாரிப்பு முறை மற்றும் செயல்படுத்தும் முறையைப் பற்றி விரிவாய் காண்போம்.

 

 

 முந்தைய பகுதி இயற்கை விவசாயம் ஒரு அறிமுகம்

1)இயற்கை விவசாயம் ஒரு அறிமுகம்

அடுத்த பகுதி பீஜாமிர்தம்

2)பீஜாமிர்தம்

What's Your Reaction?

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0