பாரம்பரிய நெல் ரகங்கள் (ஒரைசா சட்டைவா)
நெல் வெறும் சொல் அல்ல. உலக மக்களுக்களின் பிரதான அன்றாட உணவுகளில் நெல் முன்றாம் உணவு ஆகும். ஆனால், ஆசியாவில் 135 மில்லியன் ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்டு நெல் முதலிடம் வகிக்கிறது. உழவர்களுக்கு இயற்கை தந்த வரங்களில் பெரிதான பொக்கிஷம் நெல் (ஒரைசா சட்டைவா) ஆகும். இவ்வுலகில் 100- க்கும் மேற்பட்ட நாடுகளில் நெல் பயிரிடப்படுகிறது. நம் இந்தியா, உலகளவில் நெல் உற்பத்தியில் 2-ஆம் இடத்தில் உள்ளது. நெல் ஆனது கடல்மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்திலும், 10 அடி கீழ்ப்பகுதியிலும் வளரும் தன்மை கொண்ட நெல் வகைகளும் உண்டு. அதுமட்டும் அல்லாமல், 500 மில்லி மீட்டர் மழையளவு கொண்ட பகுதியிலும் வளரும் தன்மை கொண்ட நெல் ரகங்களும் உண்டு. வேத காலங்களில் 4 லட்சம் நெல் ரகங்கள் இருந்தன. தற்போது 10,000 திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இந்தியாவில் பயிர் செய்யப்படுகிறது. இவற்றில் பரம்பரிய நெல் ரகங்கள் வியாபார நோக்கத்தால் அழிந்துக் கொண்டு வருகிறது. அவற்றை காப்பாற்றும் வகையில் திரு. நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்டு தற்போது, 11-ஆம் ஆண்டு நெல் திருவிழாவை கொண்டாடிவருகிறோம்.
பாரம்பரிய நெல் ரகங்கள்
நெல் வெறும் சொல் அல்ல. உலக மக்களுக்களின் பிரதான அன்றாட உணவுகளில் நெல் முன்றாம் உணவு ஆகும். ஆனால், ஆசியாவில் 135 மில்லியன் ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்டு நெல் முதலிடம் வகிக்கிறது. உழவர்களுக்கு இயற்கை தந்த வரங்களில் பெரிதான பொக்கிஷம் நெல் (ஒரைசா சட்டைவா) ஆகும். இவ்வுலகில் 100- க்கும் மேற்பட்ட நாடுகளில் நெல் பயிரிடப்படுகிறது. நம் இந்தியா, உலகளவில் நெல் உற்பத்தியில் 2-ஆம் இடத்தில் உள்ளது. நெல் ஆனது கடல்மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்திலும், 10 அடி கீழ்ப்பகுதியிலும் வளரும் தன்மை கொண்ட நெல் வகைகளும் உண்டு. அதுமட்டும் அல்லாமல், 500 மில்லி மீட்டர் மழையளவு கொண்ட பகுதியிலும் வளரும் தன்மை கொண்ட நெல் ரகங்களும் உண்டு. வேத காலங்களில் 4 லட்சம் நெல் ரகங்கள் இருந்தன. தற்போது 10,000 திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இந்தியாவில் பயிர் செய்யப்படுகிறது. இவற்றில் பரம்பரிய நெல் ரகங்கள் வியாபார நோக்கத்தால் அழிந்துக் கொண்டு வருகிறது. அவற்றை காப்பாற்றும் வகையில் திரு. நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்டு தற்போது, 11-ஆம் ஆண்டு நெல் திருவிழாவை கொண்டாடிவருகிறோம். இத்திருவிழாக்கள் முலமாக இன்றுவரை கிட்டதட்ட 169 வகையான தமிழக பாரம்பரிய நெல் வகைகள் காப்பாற்றப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. பெருவரியான விவசாயிகள் பாரம்பரிய நெல்களை சாகுபடி (விளைவிக்க) செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். நெல் பயிரிடும் காலங்களை பற்றி நாம் அறிவது மிக முக்கியம். இவற்றை நம் முன்னோர்கள் வகுத்து வறையறுத்து நமக்கு கொடுத்தவை.
1.கார் = ஏப்ரல் – மே
- குருவை = ஜுன் – ஜுலை
- சம்பா = ஆகஸ்ட்
- தாளடி = செப்டம்பர் – அக்டோபர்
- குள்ளன் கார் = டிசம்பர் - ஜனவரி
இப்பதிப்பில் மிக முக்கியமான 62 வகையான தமிழக பாரம்பரிய நெல் ரகங்களில் முதல் 10 ரகங்கள், அவற்றின் விளையும் காலம் மற்றும் பயன்கள் காண்போம்.
- தங்கச்சம்பா
காஞ்சிபுரம் பகுதியில் வளரகூடியது. தாளடி (செப் - அக்டோ) மற்றும் சம்பா (ஜுலை 15- ஜனவ 14). மக்கிய தாவரப் பொருட்கள் கலந்த களிமண் இப்பயிருக்கு ஏற்றது. பயிர் காலம் நாற்றாங்கால் முறையில் 160 -165 நாட்கள் ,நாற்றாங்காலில் (40 நாட்கள்). தங்க நிற குச்சி போன்ற அரிசி விழாக்கால சிறப்பு சாப்பாடு மற்றும் புலால் போன்ற உணவு வகைகள் செய்யப்பயன்படுகிறது. பஞ்சம் மற்றும் பூச்சி தாக்கத்தை தாங்கும் ரகம்.
- பூங்கார்
ராமநாதபுரம் பகுதியில் வளரகூடியது.புரட்டாசியில் மழை பொய்க்கும் பொது கார்த்திகை (அக்டோ) மாதம் விதைத்து தை(ஜனவரி) மாதம் அறுவடை செய்யக்கூடிய ரகம் விளைச்சல் குறைவாக இருக்கும்.கரடுமுரடான மணல் கலந்த மண்ணில் வளரக்கூடியது. சிவப்பு நிற கொண்டவை. பஞ்சம், நோய் மற்றும் பூச்சி தாக்கத்தை தாங்கும். உயரமாக வளரக்கூடிய ரகம். மழை பொழிவு இல்லாத காலத்திலும் குலிவெடிச்சான் ரகத்தைவிட நன்றாக வளரும் ரகம்.
- கருப்பு கவுணி
சிவகங்கை மாவட்டத்தில் அதிகமாக பயிரிடப்படும் நெல் வகை,150 முதல் 170 நாட்கள் (நேரடி பயிர் விதைப்பு முறை சிறந்தது). பயிர் காலம் செப் - ஜன (தாளடி மற்றும் குள்ளகார்). இவ்வருசி கருப்பு நிறத்தில் இனிப்பு வகைகள் தாயரிக்க பெருமளவு பயன்படித்தப்படுகிறது. வறட்சி தாங்கக்கூடியது. கரிசல், செம்மண் இரகத்திற்க்கு ஏற்ற மண்.
- நீலம்சம்பா
காஞ்சிபுரம் பகுதியில் வளரகூடியது. சம்பா (ஜுலை 15- ஜனவ 14). மக்கிய தாவரப் பொருட்கள் கலந்த களிமண் இப்பயிருக்கு ஏற்றது. பயிர் காலம் நாற்றாங்கால் முறையில் 175-180 நாட்கள், சிவப்பு நிற கொண்டவை. வெட்டுகிளி ம்ற்றம் வண்டு தாக்கத்தை தாங்கும். பாலூட்டும் தாய்மார்காளுக்கு கொடுக்க வேண்டிய நெல் ரகம்.
- வாடன்சம்பா
காஞ்சிபுரம் பகுதியில் வளரகூடியது. சம்பா (ஜுலை 15- ஜனவ 14). மக்கிய தாவரப் பொருட்கள் கலந்த களிமண் இப்பயிருக்கு ஏற்றது. பயிர் காலம் நாற்றாங்கால் முறையில் 155-160 நாட்கள் ,நாற்றாங்காலில் (40 நாட்கள்), நேரடி விதைப்புக்கும் ஏற்ற ரகம்.வெளிரிய வெள்ளை நிற கொண்டவை. பஞ்சம், நோய் மற்றும் பூச்சி தாக்கத்தை தாங்கும். பயிர்தாள்கள் பச்சையாக இருக்கும் போது அறுவடை செய்யக் கூடிய ரகம்.
- கல்லுருன்டை
நாகப்பட்டினம் பகுதியில் வளரகூடியது. முடிவு சம்பா (செப் 15-பிப் 14) மற்றும் (டிசம் 15 - மார்ச் 14). மக்கிய தாவரப் பொருட்கள் கலந்த களிமண் இப்பயிருக்கு ஏற்றது. பயிர் காலம் நேரடி விதைப்பு முறையில்120 நட்கள், நாற்றாங்கால் முறையில் 160 நாட்கள். 120 செ.மீ வரை வளரகூடியது. பஞ்சம், பூச்சி மற்றும் உப்புதன்மையையும் தாங்கும் ரகம். நெல்மணிகள் மஞ்சள் நிறத்திலும் மெல்லிய கருப்பு கோடுகளுடன் இருக்கும். வெளிரிய மஞ்சள் நிற தடிமனான அரிசி. இவ்ரக தாள்கள் கூறைவெய்வதற்க்கும் வைக்கோலாகவும் பயன்படுகிறது.
7. தூயமல்லி
காஞ்சிபுரம் பகுதியில் வளரகூடியது. சம்பா (ஜுலை - ஜனவ), வண்டல் மற்றும் களிமண் இப்பயிருக்கு ஏற்றது. பயிர் காலம் நாற்றாங்கால் முறையில் 135 - 140 நாட்கள். வெள்ளை நிற அரிசி. கதிர் வரும் காலத்தில் பூ செடி அறும்பு விடுவதுபோல இருக்கும். நோய் மற்றும் பூச்சி தாக்கத்தை தாங்கும் ரகம்.
- கிச்சலிச் சம்பா
நாகப்பட்டினம் பகுதியில் வளரகூடியது. சம்பா (ஜுலை 15- ஜனவ 14). மக்கிய தாவரப் பொருட்கள் கலந்த களிமண் இப்பயிருக்கு ஏற்றது. பயிர் காலம் நாற்றாங்கால் முறையில் 140 நாட்கள் ,நாற்றாங்காலில் (30-35நாட்கள்). வெளிரிய வெள்ளை நிற குச்சி போன்ற அரிசி விழாக்கால சிறப்பு சாப்பாட்டு ரகம். பஞ்சம் மற்றும் பூச்சி தாக்கத்தை தாங்கும் ரகம்.
9. சீரகச் சம்பா
நாகப்பட்டினம் பகுதியில் வளரகூடியது. சம்பா (ஜுலை 15- ஜனவ 14). மக்கிய தாவரப் பொருட்கள் கலந்த களிமண் இப்பயிருக்கு ஏற்றது. பயிர் காலம் நாற்றாங்கால் முறையில் 130- 140 நாட்கள் ,நாற்றாங்காலில் (30-35நாட்கள்). 80.5 செ.மீ வரை வளரகூடியது. பிரியாணி செய்வதற்க்கு ஏற்ற ரகம், குச்சி போன்ற அரிசி விழாக்கால சிறப்பு சாப்பாட்டு ரகம்.
- சம்பா மோசனம்
காஞ்சிபுரம் பகுதியில் வளரகூடியது. சம்பா (ஜுலை 15- ஜனவ 14). ஏரிக்கரைக் களிமண் இப்பயிருக்கு ஏற்றது. பயிர் காலம் நாற்றாங்கால் முறையில் 160 -165 நாட்கள் ,நாற்றாங்காலில் (40- 45 நாட்கள்). சிவப்பு நிற அரிசி அவல் (தட்டை அரிசி), இட்லி, தோசை போன்ற உணவு வகைகள் செய்யப்பயன்படுகிறது. பூச்சி தாக்கத்தை தாங்கும் ரகம். இவ்வரிசியை புழிதிகால், எரிநெல், மடுவு முழங்கி அழைக்கப்படுகிறது. இயவற்றை அறுவடை செய்ய எரியில் பயணம் செய்து செல்வார்களாம்.
இயற்கை விவசாயத்தைப் பற்றி அறிய