பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 2

பால் திரிந்தால் பயன்படாது, அது போல் பழமொழியின் அர்த்தங்கள் திரிந்தாலும் அவை பயன்படாது. அது மட்டும் இல்லாமல், பால் சுவையை போல, உங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும் பழமொழிகளின் உண்மை அர்த்தத்தையும், வடிவத்தையும் நம்மால் அனுபவிக்க முடியாமல் போய்விடும். பழமொழி=பழமை+மொழி, தமிழில் இத்தொகையை பண்புத்தொகை என்பர். அதுபோல பழமொழிகள் நம் நல்ல பண்பை வளர்க்க கூடியது. அதனால், அதனின் அர்த்தத்தை நம் பெரியவர்கள் நமக்கு போதித்த அர்த்தத்திலே அறிந்து அதன்படி நடப்பது நமது கடமையே /..

பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி 2

பழமொழியும் அதனின் திரிந்த அர்த்தங்களும்

பால் திரிந்தால் பயன்படாது, அது போல் பழமொழியின் அர்த்தங்கள் திரிந்தாலும் அவை பயன்படாது. அது மட்டும் இல்லாமல், பால் சுவையை போல, உங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும் பழமொழிகளின் உண்மை அர்த்தத்தையும், வடிவத்தையும் நம்மால் அனுபவிக்க முடியாமல் போய்விடும். பழமொழி=பழமை+மொழி, தமிழில் இத்தொகையை பண்புத்தொகை என்பர். அதுபோல பழமொழிகள் நம் நல்ல பண்பை வளர்க்க கூடியது. அதனால், அதனின் அர்த்தத்தை நம் பெரியவர்கள் நமக்கு போதித்த அர்த்தத்திலே அறிந்து அதன்படி நடப்பது நமது கடமையே /..

1) 'அடி உதவர மாதிரி, அண்ணத்தம்பி கூட உதவ மாட்டார்கள்' என்ற பழமொழியை சொல்லி உங்களை எத்தனை பேர் அடித்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் இதன் உண்மை பொருள் என்ன? என்று பார்ப்போம் வாருங்கள்,

'அடிகள் உதவர மாதிரி, அண்ணத்தம்பி கூட உதவ மாட்டார்கள்'. இதில், அடி என்றால் பெரம்படி இல்லைங்க, அடிகள் என்றால் திருக்குறள், நாலடியார் போன்ற நூட்கள் நமக்கு ஏற்ற வேலையில் நல்ல அரிவுரைகளை நமக்கு வழங்கி அண்ணத்தம்பியை விட அதிகம் உதவும் என்று பொருள் ஆகும்..

2) 'ஆடி காற்றில், அம்மியும் பறக்கும்' என்ற பழமொழி கேட்ட உடனே ஆடி மாதத்தில் அடிக்கும் காற்றுக்கு அவ்வளவு சக்தி உண்டா? என்று வியந்தேன்.ஆனால் இதன் உண்மை பொருள்.

'ஆடி காற்றில், அம்மையும் பறக்கும்'. இதில், அம்மி என்று அல்ல, அம்மை என்றுதான் கூறியுள்ளனர்.அம்மை என்றால் அம்மை நோய் ஆகும். கோடைக் காலங்களில் வரும் நோய்கள் கூட ஆடி மாத குளிர்ந்தக் கற்றில் பறந்து போகும் என்பது பொருள்.

3) 'ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே' என்ற பழமொழியில் சில வார்த்தைகளை விட்டுவிட்டு தவறான பொருள் படும் புண்மொழி இது. உண்மை இதோ/.

'நல்லது ஆவதும் பெண்ணாலே, தீயவை அழிவதும் பெண்ணாலே' என்பதில் முன்னோர்கள், பெண்களின் உயர்வை கூறியுள்ளனர். ஆனால்,நமக்கு இன்று வழக்கத்தில் உள்ளதை பாருங்கள்.

4) 'பாம்பைக் கண்டால், படையே நடுங்கும்' என்ற பழமொழியை பலர் பேசும் போது பயமாகவும், பதற்றமாகவும் இருப்பது உண்மைதான் ஆனாலும்,

'பாம்பைக் கண்டால், படையே நடுங்கும்' இதில், பாம்பு என்பது மாஹபாரத போர்கலத்தில் அர்ஜீனன், கர்ணன் ஆகியோர் பயன்படுத்திய நாக அஸ்த்திரம் ஆகும். இந்த நாக அஸ்த்திரத்தைக் கண்டு படைவீரர்கள் பயப்படுவார்கள் இதுதான் இப்பழமொழியில் பாம்பு என்று வடிவம் பெற்றுள்ளது.

5) 'ஐந்து பெற்றால், அரசனும் ஆண்டிதான்' என்ற பழமொழியில் குறிப்பிட்ட 'ஐந்து' என்பதை, பலர் ஐந்து பெண்பிள்ளைகளை பெற்றால் அரசனிடம் உள்ள செல்வங்கள் முழுவதும் அழிந்து விடும் என்று தவறாக பயன்படுத்துவார்கள். ஆனால்,

''ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டிதான்'' என்பதில் 'ஐந்து' என்பது "ஆடம்பரமாக வாழும் தாய், பொறுப்பில்லா தகப்பன், ஒழுக்கம் தவறும் மனைவி, துரோகம் செய்யும் உடன்பிறப்புக்கள், பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை".ஆகிய ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான். என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது

6) 'அடி மேல் அடி வைத்தால், அம்மியும் நகரும்' என்ற பழமொழியை பலரும் பேசும் போது புரியாமல் இருந்தது,

'அடி மேல் அடி வைத்தால், அம்மியும் தகரும்' இங்கு 'தகரும்' என்பதற்க்கு 'நகரும்', என்று பொருள் வரும் அர்த்ததில் எழுத்துப்பிழை இப்பழமொழியில் ஏற்பட்டுள்ளது. கடினமான அம்மி, ஆட்டாங்கல், ரக்கை, இயந்திரம் போன்ற பொருட்கள் கூட அடி மேல் அடி அடிக்கும் போது அது உடந்துதான் போகும்.

7) 'கண்டதை படித்தால், பண்டிதன் ஆகலாம்' என்ற பழமொழியை கேட்கும் போது கண்ணில் தென்படுவதை எல்லாம் படித்தால் பண்டிதனாகலாம் என்று நினைப்போம் நல்லது தான். ஆனால்,

'கண்டு அதை படித்தால், பண்டிதன் ஆகலாம்' என்ற இப்பழமொழியின் உண்மையான பொருள் 'நல்லது என்று கண்டு அதை', படித்தால் பண்டிதனாகலாம்.அதாவது, ஆத்திசூடி, திருக்குறள், மூதுரை, நாலடியார் மற்றும் பல நல்ல நூள்களை கண்டு அதை படிக்க வேண்டும். என்பது தான் இதன் அர்த்தம்.

8). 'வர, வர மாமியார், கழுதைப் போலானாள்' என்ற பழமொழியை பெறும்பாலும் ஆசிரியப் பெருமக்கள் நன்றாக படித்த பிள்ளை மதிப்பெண் குறையும் போது சொல்வார்கள்.

'வர, வர மாமியார், கை தைப் போலானாள்' இப்பழமொழியில் (கை தை = உமத்தங்காய்) மாமியாரை உமத்தங்காயுடன் ஒப்பிட்டு சொல்லிருக்கிறார்கள்.இங்கு கை தை மறுவி கழுதை என்றானது. பலருக்கும், ஏன் மாமியாரை உமத்தங்காயுடன் ஒப்பிட்டுள்ளனர்? இச்சந்தேகத்தை போக்க விளக்கம் தேவைப்படுகிறது. மாமியாரும் ஒரு காலத்தில் மருமகளே,அதுபோல, இந்த உமத்தங்காயும் முன்பு உமத்தம்பூ. எப்படி மெண்மையான இப்பூவில் தேன் இருந்தததோ அதுபோல மருமாகளாய் இருந்த மாமியரும் சாந்தமாய் இருந்து இப்போது கை வைத்தால் குத்தும் உமத்தங்காயாய் மாறிவிட்டார் என்று பொருள். உமத்தங்காயை உட்கொண்டால் விஷம் தான் ஆனால், அவற்றை கரும்பலகையில் தேய்தால் எழுதும் எழுத்து தெளிவாய் தெரியும் அதுபோல மாமியார் என்பவர் கணவன்,மனைவி எண்ணங்களை ஒருவரோடு ஒருவர் புரிந்துக் கொள்ள செய்பவர்.

9) 'அரசனை நம்பி, புருசனை விட்டக் கதை' என்ற பழமொழியில் அரசன் என்று குறிப்பிடுவது மன்னனை (ராஜாவை) அல்ல. அரச மரத்தை குறிப்பதாகும்.

'பிள்ளை வரம் வேண்டி அரசனை நம்பி, புருசனை விட்டக் கதை' இப்பழமொழியில் பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள் காலை, மாலை அரசமரத்தை சுற்றிவர பிள்ளைச் செல்வம் கிடைக்கும் என்ற கூற்றை நம்மி அதாவது அரசமரத்தை மட்டும் நம்பி புருசனை விட்ட கதை என்பதுதான் உண்மையான இதன் பொருள்.இங்கு அரசமரத்திலிருந்து வெளியாகும் ஓசோன் என்ற உயரிய ஆக்ஸிஜன் தாய்க்கும்,சேய்க்கும் நல்ல வளர்ச்சியை கொடுப்பது ஆகும்.

10) 'கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே, கையில் வாளோடு முந்தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி' என்ற பழமொழி கேட்ட உடனே கல் தோன்றி, மண் தோன்றுவதற்க்கு முன்னால் எப்படி ஒரு சந்ததி உருவாக முடியும். இது சத்தியமா? வாருங்கள் பார்ப்போம்.

'கல் தோன்றி, மன் தோன்றா காலத்தே, கையில் வாளோடு முந்தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி' இப்பழமொழியில் 'கல்' என்றால் 'கல்வி' எனவும். 'மன்' என்றால் மன்னன் எனவும் பொருள்படுமாறு கூறியுள்ளனர். இப்பழமொழியின் உண்மைப் பொருள் உலகின் பலப் பகுதியில் கல்வி அறிவு தோன்றி, மன்னன் உருவாகி ஆட்சி ஒழுங்கு செய்யாத காலத்தில் கையில் வாளெடுத்து தன் மக்களுக்காக போர் புரிந்து மக்கள் செல்வத்தையும், கல்வி செல்வத்தையும் காத்த மூத்தக் குடி நம் தமிழ் குடி.

வாழ்க தமிழ்வளர்க தமிழ்...

1) அடுத்த பகுதிக்கு செல்ல

பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி-3

2) முந்தைய பகுதிக்கு செல்ல

பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் பகுதி-1

What's Your Reaction?

like
26
dislike
5
love
4
funny
4
angry
2
sad
4
wow
8