மனித உடலில் நோய்களை எதிர்க்கும் வைட்டமின் போராளிகள்

நமது உடல் என்பது அருமையான எந்திரம். இவை, ஒரே நாளில் உருவானதும் இல்லை. ஒரே நாளில் அழிந்து போவதும் இல்லை. நோய் என்பது நமது உடலை ஆட்கொள்ள வரும் போது சில அறிகுறிகளை ஏற்படுத்தும் அவற்றை அறிந்து கொண்டு அவற்றை போக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நம் மனித உடலில் மினரல்கள் (தாதுக்கள் )மற்றும் வைட்டமின்கள் குறைபாடு காரணமாக பல நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன அவைகள் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.. 

மனித உடலில் நோய்களை எதிர்க்கும் வைட்டமின் போராளிகள்

மனித உடலின் ஆச்சரியமூட்டும் சில தகவல்களை சுருக்கமாக பார்த்த பின்னர், ஆச்சரியம் ஊட்டும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் குறைபாடுகளால் தோன்றும் நோய்அறிகுறிகள், அவற்றை கவனிக்காமல் விட்டால் ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றை அறிகுறிகள் ஏற்படும் போதே விரட்டி அடிப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை  இப்பதிப்பில் விரிவாய் காண்போம். 

வைட்டமின்கள் நமக்கு ஆரோக்கியத்தை மட்டும் அல்ல வடிவத்தையும் ( Body Shape) கொடுக்கின்றன.

SHAPE என்பது ஒர் சுருக்க பெயராகும், அதாவது சில வார்த்தைகளின் முதல் எழுத்தை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும்.

S (Spiritual Gift)      ஆன்மீக பரிசு

H (Heart)           இருதயம்             

A (Abilities)         திறமைகள்

P (Personality)       ஆளுமை (தனித்துவம் வாய்ந்த குணம்)

E (Experience)       அனுபவங்கள்

 

மனித உடலின் ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்.

      நீங்கள் பிரமிக்கத்தக்க அதிசயமாக உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நிருபிக்கும் உங்களை பற்றிய மேலும் சில வியப்பூட்டும் தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

     நமது காதுகளால் ஏறக்குறைய 4,00,000 நான்கு லட்சம் வித்தியாசமான சப்தங்களை கேட்டறிய முடியும். நம்முடைய கண்களால் 1 கோடி வித்தியாசமான நிறங்களை கண்டறிய முடியும். 1 லட்சம் கோடி வித்தியாசமான வாசனைகளைக் முகரந்தறியும் திறன் நமது மூக்கிற்கு உண்டு.

     நம்முடைய இருதயமானது ஒரு நாளைக்கு 8,000 லிட்டர் அளவிற்கு, அதாவது, ஒரு நாளைக்கு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 40 நீல நிற ட்ரம் நிரம்பும் அளவிற்கு இரத்தத்தை பம்ப் செய்கிறது !

     இதன் மூலம், நம்முடைய இரத்தமானது ஒரு நாளைக்கு 12,000 மைல்கள் அளவிற்கு நம்முடைய உடலிற்குள் பயணம் செய்கிறது. இது நான்கு முறை காஷ்மீர் சென்று வருவதற்குச் சமமாகும்.

     ஒரு ட்ரக்கை 20 மைல்கள் அதாவது 28 கி.மீ. தூரத்திற்கு ஓட்டகூடிய அளவிற்குச் சக்தியை மனித இருதயம் உற்பத்தி செய்கிறது !

     ஒரு விநாடிக்கு, நம்முடைய மூளைகளில் ஏறக்குறைய 1 லட்சம் ரசாயன எதிர்வினைகள் நடைப்பெறுகின்றன. மனித மூளையில் 10,000 கோடி நியூரான்கள் இருக்கின்றன.

     நம்முடைய மூளையில் 75 சதவீதம் தண்ணீராகும். நாம் விழித்திருக்கும் போது நம்முடைய மூளை உற்பத்தி செய்கிற மின்சாரமானது (10 முதல் 23 வாட்ஸ் வரை) ஒரு பல்ப்பை எரிய வைப்பதற்கு போதுமானது.

                3 இஞ்ச் நீளமுள்ள உலோக ஆணியைச் செய்யக்கூடிய அளவிற்கு இரும்பு, 900 பென்சில்களை செய்யக்கூடிய அளவிற்கு போதுமான கார்பன், மற்றும் 2,200 தீக்குச்சிகளை உண்டாக்கும் அளவிற்குப் போதுமான பாஸ்பரஸ் நம்முடைய சரீரத்தில் இருக்கிறது.

     நம்முடைய எலும்புகளில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளக்கூடிய காலெஜன் என்கிற ஒரு பொருள் இருக்கிறது. இதன் விளைவாக, ஏறக்குறைய ஒவ்வொரு 7 ஆண்டுகளும் நமக்கு ஒரு புதிய எலும்புக்கூடு கிடைக்கிறது.

  1. வைட்டமின் குறைபாடு (Vitamin A Deficiency)

      முன்னுரையில் கூறியபடி, நமது கண்களால் வெவ்வேறு விதமான ஒளி அளவுகளில் நாம் பார்க்கும் காட்சிகளில், ஏற்படும் சிறு சிறு நிற மாற்றங்களை  1 கோடி என்ற அளவிற்கு வித்தியாசமான நிறங்களாக வேறுப்படுத்தி நம்மால் பார்க்க முடியும். இரவு நேரங்களில் மட்டும் இவற்றின் முழு அழகை நமது கண்களால் ரசிக்கமுடியும் இப்படி இருக்க வைட்டமின் ஏ குறைபாட்டால் மாலை கண் நோய் எற்பட்டால் என்ன செய்வது. வைட்டமின் ஏ குறைபாடு இல்லாமல் சரி செய்யும் வழி முறைகளை காண்போம். உலகின் அழகை இரவிலும் ரசிப்போம்.

அறிகுறிகள்

கை, கால் நகங்களில் சமம் அளவு இல்லாமல் குட்டையாகவும், நீட்டாகவும் வளர்தல் Uneven Nails.

நோய்கள்

நிக்டோ லோபியா-மாலை கண் நோய் Night Blindness

உண்ண வேண்டிய உணவுகள்

கேரட், மஞ்சள் நிற சதையுள்ள பழங்களில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பின் பால் மீன் போன்றவையிலும் இவை உள்ளது. வைட்டமின் ஏ கொழுப்பில் கரையக் கூடியது. அதனால், மரச்செக்குகளால் பிழிந்தெடுக்கும் சமையல் எண்ணைகளை உணவில் பயன்படுத்த வேண்டும். Cold pressed oil.

  1. வைட்டமின் பி குறைபாடு (Vitamin B Deficiency)

                ‘பி’ வைட்டமின் என்பது ஒரே வைட்டமின் அல்ல. இதில் 15 வைட்டமின்கள் அடங்கும். இவை பி காம்ளக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது In B Complex 15 type of B Vitamin. நீரில் கரைய கூடியவை. ரொட்டியை புளிக்க செய்யும் ஈஸ்டில் வைட்டமின் ‘பி’ அதிகம் உள்ளது.

வைட்டமின் பி குறைபாட்டு பொதுவான பிரச்சனைகள் (Common problems of Vitamin B Deficiency)

தோல் அல்லது சருமப் பிரச்சனைகள் Skin Problems, முடி உதிர்தல் பிரச்சனைகள் hair problems, கை, கால் நகங்களில் பிரச்சனைகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகள்.

 

2.1 வைட்டமின் பி1 குறைபாடு (B1 Deficiency)

மாறுகண் தோன்றுதல் Wandering Eyes, கை, கால் நகங்களில் கிடைமட்ட வரிகள் தோன்றுவது  Horizontal lines on Nails.

பி1’ குறைபாட்டு நோய்:  பெரி-பெரி (நரம்புச் செயல்பாட்டுக் குறைவு)

 

2.2 வைட்டமின் பி2 குறைபாடு (B2 Deficiency)

குதிகால் வெடிப்பு ஏற்பட்டு விரிசல் அடைதல் Braked hells, கண்கள் இரத்தம் போல் சிவப்பாய் இருப்பது. Blood Slots in eyes.

2.3 வைட்டமின் பி5 குறைபாடு (B2 Deficiency)

           பெல்லாகரா – மறதி நோய், தோல் நோய், வயிற்றுப்போக்கு

2.4 வைட்டமின் பி6 குறைபாடு (B6 Deficiency)

முகத்தில் நெற்றிப்பகுதி, கண்ணங்கள் மற்றும் மூக்கு பகுதிகள் சிவந்து காணப்படுவது. Redness in forehead, Cheeks and Nose. மற்றும் வயிற்றுப்போக்கு.

பி6 குறைபாட்டு நோய் :   பெல்லாகரா (மறதி நோய், தோல் நோய்)

2.5 வைட்டமின் பி12 குறைபாடு (B12 Deficiency)

கை, கால் நகங்கள் பழுப்பு நிறமாக மாறுவது. Brownish Colored Nails.

பி12’ குறைபாட்டு நோய்: பெர்னீசியஸ் அனிமியா (இரத்தச்               சிவப்பணுச் சிதைவு).

உண்ண வேண்டிய உணவுகள்

                ஆரோக்கியமான சரிவிகித வீட்டு உணவு மற்றும் பழங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

     பிசா, பர்கர், டோனக்ட்ஸ், பஜ்ஜி, போன்டா, கேக், ஜாம், சிப்ஸ் ரகங்கள் போன்ற நெறுக்கு தீனிகள் அதிகளவு சாப்பிடும் போதும், துரித உணவு அடிக்கடி சாப்பிடும் போதும், மொத்தத்தில் ஆரோக்கியமில்லா உணவு சாப்பிடும் போதும் அவைகளால், நமது வயிறு நிரம்பி விடுகிறது. ஆனால், உடலுக்கு தேவையான ஆற்றல் வெகுவாக குறைக்கிறது. குறிப்பாக உடலில் ஆரோக்கியம் குறைக்கிறது. அதனால், வைட்டமின் பி குறைபாடு ஏற்படுகிறது.

 

  1. பையோட்டின் பி7 குறைபாடு (Biotin Deficiency)

  

  

பெண்களுக்கு தலை சீவி பூச்சூடிய சிகை அலங்காரம் என்பதும் பல நிற வண்ணம் பூசி கை, கால் நக அலங்காரம் என்பதும் அவர்களுக்கு பொன்நகை அலங்காரம் போன்றது. ஆண்களுக்கு தலைமுடி திருத்தம் செய்யப்பட்ட கருப்பு வைரத்தாலான கிரிடம் போன்றது. இவற்றை நாம் இழக்கலாமா? கூடாது. அப்படி என்றால் பையோட்டின் குறைபாடு வராமல் நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும். பையோட்டின் என்றால் வைட்டமின் பி7 குறைபாடு

அறிகுறிகள்

                வறட்சியான முடி (Dry hair), முடி உதிர்தல்  (Hair fall),  கை, கால் நகங்கள் சுலபமாக உடைந்து போதல் (Broken Nails)  மற்றும் நகங்களில் தோல் உரிதல் (Skin peeling in nails) போன்ற அறிகுறிகள் புரத குறைபாட்டால் ஏற்படுகின்றது.

நோய்கள்

     மரபணு குறைபாடு (பரம்பரை குறைபாடு) இல்லாமலே தலைமுடி உதிர்ந்து சொட்டை விழுதல். கை, கால் நகங்கள் சுலபமாக உடைந்து புண் ஏற்பட்டு கைகளால் வேலை செய்ய முடியாமல் போகலாம், கால்களால் நடக்க முடியாமல் போகலாம்.

உண்ண வேண்டிய உணவுகள்

முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் புரதச்சத்தின் (Biotin) அளவு அதிகமாக உள்ளது. ஆனால், அவற்றை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடக்கூடாது. முட்டையை வேக வைத்து பின் சாப்பிட வேண்டும். (Boiled Egg to improve the Biotin level in our body). தயிருடன் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர புரதக்குறைபாடு (Biotin Deficiency) நீங்கி அவற்றால் ஏற்படும் அசவுரியங்கள் நீங்கும்.  (Mix a spoon of Jagger with curd).

 

  1. வைட்டமின் – சி குறைபாடு (Vitamin-c Deficiency)

   

இரத்தம் நம் உடம்பில் உருவாக நாம் சாப்பிடுகிறோம். ஆனால், சாப்பிடும்போது இரத்தம் வெளியானால் என்ன செய்வது.

அறிகுறிகள்

சாப்பிடும்போது வாயில் மற்றும் பல் துலக்கும் போது ஈறுகளில் இரத்தம் வடிதல், நாக்கில் புண் மற்றும் கொப்புளங்கள் உண்டாவது எல்லாம் உடலில் வைட்டமின் சி குறைபாடு ஏற்படுவதன் காரணம் ஆகும்.

நோய்கள்

     ஸ்கர்வி நோய், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து அனைத்து நோய்களுக்கும் நமது உடலில் அனுமதி சீட்டு கொடுக்கும் நிலை ( Immune system will damaged). கொழுப்பின் அளவு அதிகமாகி உடல் பருமன் ஆகுதல்.  (Fat level will increase in body due to that body weight gaining problem)

உண்ண வேண்டிய உணவுகள்

     ஸ்ராபெரி, கொய்யா, ஆராஞ்சு, எலுமிச்சை, பப்பாளி மற்றும் மலை நெல்லிக்காய். (Strawberry, Guava, Orange, Limon, papaya and last but not least Gooseberry)

 

  1. வைட்டமின் டி குறைபாடு (Vitamin D Deficiency)

வைட்டமின் ‘டி’ குறைப்பாட்டால் அதிக பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் எனவேதான், சூரிய ஒளியில் நிற்க சில அரசு தரப்பு அறிவுரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. வைட்டமின் ‘டி’ மனித உடலிலேயே ஓரளவு உற்பத்தி ஆகக்கூடியது. கொழுப்பில் கரையக்கூடியது. மனித எலும்பு மண்டலத்தின் வளர்ச்சி காரணிகள் வைட்டமின் ‘டி’ ஆகும்.

அறிகுறிகள்

உடல் எடை கூடுதல், உலர்ந்த தோல்பகுதி, செரிமானப் பிரச்சனைகள், கை கால் மூட்டு வலி ஏற்படுதல், வியர்வை அதிகமாக சுரப்பது மற்றும் இரத்த கொதிப்பு போன்றவை வைட்டமின் ‘டி’ குறைப்பாட்டால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும்.

செய்ய வேண்டியவை

 பால், காளான், முட்டை மற்றும் மீன்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும், சூரிய ஒளியில் நடமாட வேண்டும்.

நோய்கள்

  ரிக்கட்ஸ் – எலும்புகளில் கால்சியம் குறைபாடு

 

  1. வைட்டமின் ஈ குறைபாடு (Vitamin E Deficiency)

      நமது உடலில் புண்கள் ஏற்பட்டால் அவற்றை சரி செய்வது வைட்டமின் ‘ஈ’ ஆகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இரத்தக்குழாய்களில் வெட்டு ஏற்படும் போது பாதிப்பை குறைந்தளவு செல்களுக்கு விட்டுகொடுத்து மீதம் உள்ள செல்களை பாதுகாப்பதும் வைட்டமின் ‘ஈ’ ஆகும். வைட்டமின் ‘ஏ’ செயல்படுவதற்கான காரணிகளை வைட்டமின் ‘ஈ’ உருவாக்குகிறது.

அறிகுறிகள்

கை, கால் தசைப்பிடிப்பு Muscles Cramp

செய்ய வேண்டியவை

                 புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பாட்டில் சேரத்தக் கொள்ளுதல்  அவசியம்.. விளக்கெண்ணை  குளியல் Almond oil

தவிர்க்க வேண்டியவை

     மது அருந்துவதை விட்டுவிட வேண்டும். உணவில் சர்க்கரையை தவிர்க்க வேண்டும்.

நோய்கள்

  மலட்டு தன்மை இனப்பெருக்கச் செயல் குறைபாடு Candida- Fungus Problem

  1. வைட்டமின் எப் குறைபாடு (Vitamin F Deficiency)

அபூரித கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பொதுவாக வைட்டமின் எப் என்று அழைக்கப்படுகிறது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ‘ஏ’, ‘டி’, ‘ஈ’, ‘கே’ ஆகியவை கொழுப்பில் கரைந்த பின் நமது உடல் உட்கவர்வதற்கு இந்த வைட்டமின் ‘எப்’ மிக அவசியமாக தேவைப்படுகிறது.

                மூச்சு விடுவதற்கும், ஆக்ஸிஜனை உட்கவர்வதற்கும், தோலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், இரத்தில் உள்ள கால்சியம் திசுக்களுக்குள் உடுருவிச் செல்வதற்கும் வைட்டமின் ‘எப்’ இன்றியமையாதாக உள்ளது.

     வைட்டமின்கள் ‘ஏ’, ‘டி’, ‘ஈ’, ‘கே’ ஆகியவை சரியான அளவு உடலில் இருக்கும் போது வைட்டமின் ‘எப்’ என்ற அபூரித கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) என்பதும் ஒழுங்காக செயல்படும்.

  1. வைட்டமின் கே குறைபாடு (Vitamin K Deficiency)

நமது உடலில் குடலில் காணப்படம் பாக்டீரியா, வைட்டமின் ‘கே’யை உற்பத்தி செய்கின்றது. எனவே, நமது குடலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் ஒழிய இந்த வைட்டமின் ‘கே’ பெரும்பாலும் பற்றாக்குறையாவதில்லை. உருவாக்குகிறது.

அறிகுறிகள்

அடிக்கடி ஏற்படும் வயிற்று வலி (Frequent stomach pain). இரத்த உரையாமை.

செய்ய வேண்டியவை

                 வீட்டு சாப்பாட்டை சரிவிகித உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

தவிர்க்க வேண்டியவை

     வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் பான் பாக்கு மசாலா போடுவது, மற்றும் மது அருந்துவதை கைவிட வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நோய்கள்

                இரத்தம் உறையைமை மூலம் அதிக இரத்த இழப்பு (Heavy blood loss). இரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை இரத்ததில் குறைந்து கொண்டே வரும்.

 

  1. தாமிரக் குறைபாடு (Zinc Deficiency)

      கிராமங்களில், நகத்தில் பூ போட்டிருக்கு அப்போ எனக்கு புது துணி (Dress) கிடைக்குனு சொல்லுவாங்க! ஆனால், உண்மையில் அப்படியில்ல அது ஜின்ங் குறைபாட்டு அறிகுறிகள்.

அறிகுறிகள்

     நகத்தில் வெள்ளை புள்ளிகள் தோன்றுவது (White dots in nails), முகத்தில்  தாடி வளர்வது குறைந்து வருதல் (Slow Bread Growth), மற்றும் தசை வலுக்குறைந்த காணப்படுதல் (Low muscular mass).    

நோய்கள்

     உடல் சோர்வு ஏற்பட்டு பலவீனமான நிலை (Fatigue). பின்பு, பாலிய முதிர்ச்சி ஏற்படலாம் (Sex immaturity)

உண்ண வேண்டிய உணவுகள்

                உலர் பழங்கள் Dry Fruits, பருப்பு மற்றும் பயிறு வகைகள் Legumes and lentils (Nuts)

தவிரக்க வேண்டிய உணவுகள்

     கேக், ஜாம், சிப்ஸ் ரகங்கள் போன்ற பேக்கரி ஐட்டங்கள் சாப்பிடும் போதும், சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சாப்பிடும் போதும் அவைகள், நமது உடலில் தாமிர அளவை வெகுவாக குறைக்கிறது. குறிப்பாக ஆண்கள் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்ட்ரோன் (Testosterone)  எனும் சுரப்பியின் திரவ அளவை குறைக்கிறது. அதனால், தாமிர குறைபாடு ஏற்படுகிறது.

 

  1. தைராய்டு குறைபாடு (Thyroid Deficiency)

                ஆண்களை விட இந்த தைராய்டு குறைபாடு பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பணி நேரம் முழுவதும் உட்கார்ந்து கொண்டே செய்யும் அலுவக வேலை பார்ப்போர்களுக்கு இக்குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. (Office work)

அறிகுறிகள்

                கை, கால் நகங்களில் நேரக கோடுகள் காணப்படுதல் Vertical lines in nails. கண் புருவங்களில் உள்ள முடி உதிர்தல் Eyebrow hair loss, கண்களுக்கு கீழ் வீக்கம் ஏற்படுதல் Puffy Eyes.

நோய்கள்

     முன் கழுத்து கழலை நோய்.

உண்ண வேண்டிய உணவுகள்

அயோடின் கலந்த உப்பை சமையலில் பயன்படுத்துதல் வேண்டும்.

செய்ய வேண்டியவை. 

தினந்தோறும் உடற்பயிற்சி செய்தல் வேண்டும் Body Exercise.

  1.  இரும்பு மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு (Iron and Hemoglobin Deficiency)

     பழங்காலம் முதல் இக்காலம் வரை மனித இனம் தன் முகப்பொலிவை மீட்டெடுக்க பல்வேறு வழிமுறைகளை மாறும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி வருக்கிறது. இந்த ஒரு காரியத்திற்காக ஒரு நாளில் உலகம் முழுவதும் செலவழிக்கும் பணத்தின் மதிப்பு பல கோடிகளை தாண்டும்.

அறிகுறிகள்

முகத்தின் நிறம் குறைந்து கொண்டு வருதல், உதட்டின் சிவப்பு நிறம் மாறதல் பின்பு வெளிர்ந்து போதல் போன்ற அறிகுறிகள் இரும்பு மற்றும் ஹீமோகுளோபின் குறைபாட்டை காண்பிக்கின்றது. (Iron and Hemoglobin Deficiency)

நோய்கள்

இரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வருதல் Red Blood cells count decrease,

செய்ய வேண்டியவை

     சமையல் பாத்திரங்கள் அனைத்தும் இரும்பாலானதாக இருந்தால் நல்லது. முக்கியமாக நீர், பால் கொதிக்க வைக்கும் பாத்திரம். இறைச்சி வறுக்கும் பாத்திரங்கள் இரும்பான பாத்திரமாக இருக்க வேண்டும். Iron pan use to cook  

உண்ண வேண்டிய உணவுகள்

                    பீட்ரூட், கேரட், சோளம், ஆப்பிள் மற்றும் மாதுளம் பழம்.

12 . கால்சியம் குறைபாடு- Calcium deficiency :
அறிகுறிகள்;
நாம் உட்காரும் போதும், கை மற்றும் கால்களை நீட்டி மடக்கும் போதும் உராய்வு சத்தம் (cracking sounds) வருகிறது என்றால் அது கால்சியம் குறைபாட்டு அறிகுறிகள்.  
நோய்;
அழகான பல் வரிசை, வலுவான எலும்புகள்  நமது உடலின் கட்டமைப்பை உருவாக்குபவைகள்.இந்த அறிகுறிகள் மூட்டு வலி, இடுப்பு வலி மற்றும் எலும்புகள்  பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குறைபாட்டை நிவர்த்தி செய்ய; 

பால் மற்றும் பாலில் இருந்து தாயாரிக்கபடும்  நெய், வெண்ணெய், பன்னீர் மற்றும் தயிர் போன்ற அனைத்தும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சீக்கிரம் கால்சியம் குறைபாட்டை நிவர்த்தி செய்ய தினமும் ஒரு கப் தயிரில் கால்சியம் கார்பனேட் அதாவது ஒரு சிட்டிகை சுண்ணாம்புச் சேர்த்து உட்கொண்டால்  (Mix a pinch of calcium carbonate with curd and eat once a day) நல்லது.
உணவே மருந்து... நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.....

What's Your Reaction?

like
0
dislike
0
love
1
funny
0
angry
0
sad
0
wow
0