கொரோனாவால் இந்தியாவில் நடக்கும் உலக அரசியல்

இன்று உலக நாடுகள் தங்கள் சமநிலையை இழந்து உள்ளது. இதற்கு காரணம் கொரோனா கொள்ளை நோயால் உலக நாடுகள் கடைப்பிடிக்க வற்புறுத்தப்படுகிற ஊரடங்கா? ஆம், இருக்கலாம். ஆனால், இந்த சூழ்நிலையில் இதையும் தாண்டி இந்த இக்கட்டான காலகட்டத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உலக அளவில் பொருளாதாரத்தில், வர்த்தகத்தில், பங்குசந்தையில், மருத்துவத்தில், பலதரப்பட்ட ஆராய்ச்சியில், ராணுவப்பலத்தில், விவசாய தானிய கிடங்கில் உலக வல்லரசு நாடுகளின் தரத்திலும், அந்தஸ்திலும் மதிப்பிடும் அளவிற்கு மேற்கூறிய, காரணிகளில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி தங்களை முதன்மை படுத்திக்கொள்ள திட்டம் தீட்டும் வளர்ந்த நாடான சீனா போன்றவை. கொரோனாவால் மேற்கூறிய காரணிகளில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும் வல்லரசு என்ற அந்தஸ்த்தையும், தரத்தையும், தகுதியையும் தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்ள துடிக்கும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள். இவ்வாறு, அனைத்துதரப்பிலும் தங்களை ஒரு தனிநாடாக அறிவிக்க விரும்பும் மற்றும் உலக கூட்டமைப்பில் தங்களை இனைத்துக் கொள்ள முயற்சி செய்யும் வளர்ந்து வரும் தைவான் போன்ற நாடுகள்.

கொரோனாவால் இந்தியாவில் நடக்கும் உலக அரசியல்

தங்கள் நாட்டு எல்லைகளை விரிவு படுத்த ஆயத்தப்படும் பாகிஸ்தான், நேப்பாளம் போன்ற குட்டிநாடுகள். இவ்வாறு உலக நாடுகளை அடுத்தகட்ட ஓட்டத்தில் ஏதோவொரு விதத்தில் அது மற்ற நாடுகளுக்கு நன்மையோ தீமையோ தெரியாது ஆனால், கம்பெனி சுயலாபத்திற்கு அந்நாடுகளை செயல்பட வைக்கும் கார்ப்ரேட் கம்பெனிகள்.

இந்தியாவில் நடக்கும் உலக அரசியல்:

 இவைகளெல்லாம் உலக வளர்ச்சிக்கான பாதைகள் தானே என்று குறிப்பிடுகிறீர்களா? ஆம், அது என்னவோ உண்மைதான். ஆனால், உலக நாடுகள் தங்கள் முன் இருக்கும் அந்தஸ்த்தை பெற கடைப்பிடிக்கும் நடைமுறைகளை பாருங்கள். சில காரணங்களை முன்வைத்து உலக நாடுகளின் நட்பை முறித்துக்கொள்ள பழைய ஒப்பந்தங்களை மீறுகிறார்கள் மற்றும் சாதகமான நாடுகளுடன் கூட்டு சேர்கிறார்கள். எதிரி நாடுகளுக்கு எதிராக தன் நட்பு நாடுகளில் ஏவுகணைகளைக் குவிக்கிறார்கள். இவ்வாறு, உலக நாடுகள் தனி தனி பிரிவுகளாக செயல்பட்டு இன்று எல்லை பிரச்சனை, வர்த்தகப்போர் போன்றவை நடந்தேறி வருகிறது. இவைகள் தான் உலக நாடுகளின் வளர்ச்சிக்கான பாதைகள் என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? ஒவ்வொரு நாடும் தன் எல்லைக்குட்பட்ட இயற்கை வளங்களை பயன்படுத்தி, நவீன தொழிற்நுட்பத்தை செயல்படுத்தி உலக நாடுகளுடன் நட்பு பாராட்டி வளர வேண்டுமே தவிர இப்படி தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு மற்ற நாடுகளின் எல்லையை தன்நாட்டுடன் வளைப்பது, கொள்ளை நோய்களை பரப்புவது மற்றும் விளைநிலங்களை அழிப்பது என்றெல்லாமா செய்வார்கள்!  இவையா வளர்ச்சிக்கான பாதைகள்! இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொள்ளை நோயால் பொருளாதார நிலையில் வீழ்ந்துகொண்டிருக்கும் அண்டை நாடுகளில், மேலும் போர் பதற்றத்தை காட்டி மேலும் அந்நாட்டை நலிவடைய செய்வதா வளர்ச்சிக்கான பாதை. இங்கு, குறிப்பிடப்பட்ட அனைத்தும் பின்வரும் நிகழ்வுகளின் முக்கிய காரணம் என்பதை சர்வதேச அரசியலோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பாருங்கள்.

இந்திய சீன எல்லை பகுதி பதற்றம்:

இங்கு லடாக் பகுதியின் சிறப்புகளையும் அதனை அடைய சீனா முயற்சி செய்வதற்கான காரணத்தை அறிவது மிக முக்கியமானது. இப்பகுதி இயற்கை வளம் அதிகமாகவும், மக்கள் தொகை மிக குறைவாகவும் கொண்ட அழகான பகுதி. இந்த இயற்கை வளத்தினால் மட்டும் சீனா இதை வளைக்க முன் வரவில்லை. இந்தியாவை, சீனாவிடமிருந்து இமய பெருமலைத் தொடர் இயற்கை அரண் அமைத்து பல ஆயிரம் கிலோமீட்டர் வரை பாதுகாக்கிறது. ஆனால், இந்த லடாக் பகுதி அப்படி அல்ல. சீனாவை இந்தியாவுடன் இனைக்கும் ஒரே ஒரு தரை வழி ஆகும்.

    லடாக் என்னும் இந்தியப்பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் எல்லையை திடமாக வரையறை செய்யாமல் 1947-லிருந்து சில வாக்குவாத சண்டைகளுடன் இந்தியா மற்றும் சீனா அவ்வெல்லையை பகிர்ந்து கொண்டு வந்தது. பின்பு, இந்தியா ஜம்மு, காஷ்மீர் எல்லை பகுதி மீதான தனது முழு  கவனத்தையும் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுத்தி வந்த காலகட்டத்தில்,   

அதேவேலையில் சீனா, இந்தியாவின் லடாக் பகுதியில் சிலவற்றை கைப்பற்றி தன் கொடியை அங்கு பறக்கவிட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் சீனா லடாக் என்ற இந்தியப்பகுதியில் 1950-ல் சாலை ஒன்றை நிறுவியது. இந்த சீனாவின் செயல்பாடு 1957-ல் தான் இந்தியாவிற்கு தெரியவந்துள்ளது அதுவும் சீனா அப்போது வெளிட்ட அந்நாட்டின் புதிய வரைப்படத்தை கொண்டு அறிந்த  பின்பு சில போர் சண்டைகளுடன் ஒப்பந்தங்கள் மூலம் இரு நாடுகளும் ஒரு எல்லை பகிர்ந்து கொண்டன. இப்படி இருக்க இப்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் கூடாரங்கள் போட்டு பீரங்கிகளை இறக்கியுள்ளது.

சீனாவின் இச்செயலுக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை காண்போம். ஜம்மு, காஷ்மீர் மீதான ஆர்டிகள் 370 (Article 370) என்ற சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய இந்தியா மேலும், அவற்றை 2 யூனியன் பிரதேசமாக மாற்றியது மற்றும் இந்திய குடிகள் அங்கு சொந்தமாக நிலம் வாங்கும் தடையையும் நீக்கியுள்ளது. இந்திய ராணுவத்தின் கட்டிட மற்றும் பாலம் கட்டும் வேலை அங்கு நடைபெற்று கொண்டிருப்பது. பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட இந்தியாவை சேரந்த சில காஷ்மீரின் பகுதிகளை மீட்டு தர அமெரிக்காவை இரு நாடுகளுக்கு மத்தியில் பேச இந்தியாவிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆனால், சீனா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இது போன்ற இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தீவிர செயல்பாடுகளை இந்தியா செய்து வருவது போல ,பின்வரும் நாட்களில்  இந்திய-சீன எல்லை பகுதியான லடாக் என்ற வளமான பகுதியில் இந்தியாவிருந்து சீனா கைப்பற்றி தன்வசம் வைத்திருக்கும் பல லடாக் பகுதிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற எண்ணம் சீனாவின் மனதில் புகைந்து கொண்டுதான் இருக்கிறது.

இங்கு மீதம் உள்ள லடாக் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் வசம் உள்ளது என்பது குறிப்பிட தகுந்தவை. பின்பு, தைவான் என்ற சீனாவின் அண்டை நாட்டுடன் இந்தியா நட்பு பாரட்டுவது. இது போன்ற காரியங்கள் இந்தியாவில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. ஏன் சம்பந்தம் இல்லாமல் லடாக் எல்லைப்பகுதி பிரச்சனைக்கு, ஜம்மு, காஷ்மீரில் நடப்பவை பற்றி குறிப்பிடுகிறேன் என்று நினைக்கிறீர்களா இதற்கும், தற்போது இந்திய-சீன எல்லை பதற்றத்திற்கும் கொரோனா ஒரு பாலம் அமைத்துவிட்டது. இவற்றை என்னுடைய புரிதல் மூலம் குறிப்பிடுகிறேன். மாற்று கருத்துகள் இருப்பின் கீழே குறிப்பிடுங்கள் அதன் உண்மை தன்மையை ஆராய்வோம்.

இந்தியா 1947 முதல் கொண்டே ஜம்மு, காஷ்மீர் எல்லைபகுதி பிரச்சனையை பாகிஸ்தானோடு போராடும் அளவிற்கு இந்த லடாக் எல்லைபகுதி பிரச்சனையை   சீனாவுடன் தீவிரமாக போராடவில்லை ஏன்?  இதற்கு காரணம் வர்த்தகம், பொருளாதாரம் பாதித்துவிடுமோ என்ற  சந்தேகத்தினால் கூட இந்தியா அமைதியாக இருந்திருக்கலாம். பண்டைய காலம் தொட்டே இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி போன்றவை  இருந்து வருகிறது. அவை, இன்று பலமடங்கு பெருகி நடைப்பெற்று வந்துக்கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து விதமான எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் 75 முதல் 80 சதவீதம் சீனநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள். அதுமட்டும் இல்லாமல் நாம் பயன்படுத்தும் ஆன்ட்ராய்டு கைபேசி செயலிகளில் (Android Apps) 85 சதவீதம் சீனாவின் படைப்புகள் என்றால், அது உண்மையே. இது போன்ற சீனப் பொருட்களை உபயோகிப்பதை தவிரக்க வேண்டும் என்ற கருத்து வடஇந்தியாவில் இப்போது வேகமாக பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்கட்டும். அதேபோல, இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றிய திட்டத்தை குறித்தும் மற்றும் சில குறிப்பிட்ட நிகழ்வுகளை குறித்தும்  சீனா கொரோனாவிற்கு முன் இந்த எல்லை பிரச்சனையை ஆரம்பிக்காமல் இருந்ததன் நோக்கம் என்ன? இந்தியா என்ற மாபெரும் சந்தையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் சீனா அமைதியாக இருந்திருக்கலாம். அப்படியென்றால், இன்று சீனாவின் ராணுவம் இந்திய எல்லையில் குவிக்கப்பட்டதற்கு காரணம்தான் என்ன?

சீனாவின் இச்செயலுக்கு சில காரணம் என்று பார்த்தோம் அல்லவா?  அதற்கும், இந்திய சீன எல்லை பகுதி பதற்றத்திற்கும் கொரோனா பாலம் அமைத்து விட்டது என்று கூறினேன். அதுதான் இப்போது நடப்பவைகளின் காரணங்களின் காரணம். அப்படி என்னதான் நடந்தது பார்ப்போம் வாருங்கள்.

கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றியது கிடையாது. அது செயற்கையானது அது சீனாவின் யுகான் மாகாணத்தில் வைரஸ் ஆராய்ச்சியின் போது தவறுதலாக வெளியானது என்ற அமெரிக்காவின் சீனா மீதான குற்றச்சாட்டுக்கு உலகில் மூன்றாவது நாடாக இந்தியா வழிமொழிந்தது. இது உங்களில் பல பேர் அறிந்ததே. ஆனால் இந்தியாவின் இந்த குற்றச்சாட்டு சீனாவின் மனதில் புகைந்து கொண்டெருப்பதை எரியவைத்துவிட்டது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் ஏற்கனவே பொருளாதார சிக்கல்கள் இருந்து வந்த நேரத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியாவின் இந்த குற்றச்சாட்டை உலக அரங்கில் கூறியது சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.

மேற்கூறிய ஜம்மு, காஷ்மீர் எல்லைபகுதி பிரச்சனை, அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படும் இந்தியா இவை அனைத்தும் சரி. ஆனால், தைவான் என்ற குட்டி நாட்டுடன் இந்தியா நட்பு பாரட்டுவது எந்த விதத்தில் சீனாவிற்கு எரிச்சலூட்டுகிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. வாருங்கள் அவற்றை சற்று விரிவாக காண்போம். தைவான் சீனாவிலிருந்து குடியரசு பெற்ற குட்டி நாடு (Republic from China) இதில் 2018 கணக்கெடுப்பின்படி 2 கோடியே 38 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், உலக இரும்பு, இயந்திரம், எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக் மற்றும் வேதிப்பொருட்கள் ஏற்றுமதி பொருளாதாரத்தில் 21ஆம் இடத்தை உலக அரங்கில் பெற்றுள்ளது. தன் நாட்டு மக்களுக்கு ஆயுள் காப்பீட்டு தொகையை (Health Insurance) 1980-யில் 40% சதவீதமாக இருந்ததை 2019-ற்குள் 100% சதவீதமாக (Single payer) என்ற முறையில் செய்துகாட்டி உலக நாடுகளை அசத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல், உலக முன்னனி எலக்ட்ரானிக் நிறுவனங்களான Hawaii, HTC, Apple  போன்றவற்றின் Spare parts பகுதிப்பொருட்கள் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. இப்படி, பல்வேறு துறைகளில் தைவான் முன்னேறியிருந்தாலும், தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம் என்பது இருந்துகொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒலிம்பிக்கில் பங்கு பெரும்போது இந்நாடு தனது நாட்டின் அடையாளத்தை சீனாவின் பெயர் வரும்படி சைனிஸ் தாய்பைய் (Chines Taipei) என்று பதிவு செய்ய சீனாவால் வலியுறுத்தப்படுகிறது. 1971-யில் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் தைவானுக்கு பதிலாக சீனா தன்னை இனைத்துக்கொண்டது. உலக சுகாதார மையத்தின் உறுப்பினராக, உறுப்புநாடாக சேர விண்ணப்பித்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இதற்கு பின்னால் சீனாவின் தலையிடுதல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தைவானின் சிறப்புகளை பார்த்தீர்கள்.

வாருங்கள் கொரோனாவை தடுக்கும் பணியில் தைவானின் பங்கை பார்ப்போம். கொரோனா கொல்லைநோயின் சிறப்பு தடுப்பு நடைவடிக்கைகளில் உலகளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கொரோனாவின் ஆரம்பநிலையில் முககவசம் (Mask) தட்டுப்பட்டை போக்க அப்போது பாதிப்பு அதிகமான வளர்ந்த நாடுகளுக்கும் கோடிக்கணக்கில் (Mask) ஏற்றுமதி செய்து உதவியது.

பின்னர் தைவான் கொரோனா கொல்லைநோயின் சிறப்பு தடுப்பு நடைவடிக்கைகளில் தனது அனுபவங்களையும், கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறைகளை உலக சுகாதார மையத்திற்கு தனது பரிந்துரை மின்னசலையும், கடிதத்தையும் அனுப்பிள்ளது. ஆனால், உலக சுகாதார மையம் அலட்சியம் செய்துவிட்டது. சில தடுப்பூசிகளும் பரிந்துரைக்கப்பட்டது  அவையும் ஏற்றுக்கொள்ளபடவில்லை. இப்படி இருக்க....

இந்த காலகட்டத்தில் தைவானை ஆதரிக்கும் மற்றும் அந்நாட்டுடன் நட்பு பாராட்டும் உலக நாடுகளின் எதிரி நாடுகளுடன் சீனா கைகோர்த்து வருகிறது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவிற்கு எதிராக செயல்படும் கியூபாவுடனும், இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தான் உடனும் சீனா நட்பு பாராட்டி அவர்களுக்கு தேவையான பொருளுதவி செய்து வருகிறது. இது இங்கு போய் முடிய போகிறதோ நேபாளத்தின் புதிய தேசிய வரைப்படத்திற்கு அந்நாட்டு எதிர் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதன் பின்னணி என்னவோ உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

 

வாழ்க தமிழ்......

வளர்க இந்தியா....

 

 

What's Your Reaction?

like
2
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0